Vanavil Sirpame episode 29 Tamil Novels

 


அத்தியாயம் 29
 

 

“என்ன மித்ரா...பதிலையே காணோம்?பதில் சொல்லு”

  

‘என்னடா சொல்ல சொல்ற’ இந்த கேள்வியை இந்த நேரத்தில் கேட்பான் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
 
“நான் உன்னை மித்ரானு கூப்பிடறேன்...இன்னும் சில நேரம் ஆசையா குஜிலினு கூப்பிடறேன்.நீயும் அது மாதிரி என்னை செல்லமா எதுவும் பேர் வச்சு கூப்பிடேன்”மெதுவாக அவளின் முகத்தை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டான்.
 
“அதெல்லாம் எதுவும் வேணாம்”மெதுவாக முணுமுணுத்தவள் பார்வையை சுழற்றி அறையில் ஓடிக் கொண்டிருந்த மின் விசிறியில் பதித்தாள்.
 
“அதெல்லாம் முடியாது..நீயே யோசிச்சு முடிவு செய்...என்னை எப்படி கூப்பிடலாம்ன்னு”
 
“அதெல்லாம் அனாவசியமான வேலை...எனக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்லை...உங்களுக்கு செல்லப் பேர் வைக்கணும்னு  எனக்கு ஆசையும் இல்லை”கடுப்பாக முகத்தை வைத்துக் கொள்ள முயன்றாள்.
 
“ஓ...சரி...உனக்கு ஆசையில்லைன்னா என்ன பரவாயில்லை...நானே சொல்றேன் அதுல உனக்கு எந்த பேர் பிடிக்குதோ அதையே வச்சு நீயும் என்னை கூப்பிடு.சரியா “ என்றவன் அவளின் பதிலை எதிர்பாராது கொஞ்சம் யோசிப்பது போல பாவனை செய்து விட்டு மென்குரலில் கேட்டான்.
 
“ரஞ்சன்....இது ஓகே வா? இல்லை மாமான்னு கூப்பிடறியா...வெறுமனே மாமான்னு கூப்பிடாம ரஞ்சி மாமான்னு கூப்பிடேன்...கொஞ்சம் கிக்கா இருக்கும்” என்றவன் அவளின் அதிர்ந்த முக பாவனையை காணாதவன் போல எழுந்து பூஜை அறைக்கு சென்றான்.
 
‘நான் மனசுல இவரை கூப்பிடும் விதம் இவருக்கு எப்படி தெரியும்...ஏதோ ஒண்ணுனா பரவாயில்லை...எல்லாமே எப்படி கரெக்டா சொல்றார்...கண்டிப்பா நான் சொல்லவே இல்லை.அப்புறம் எப்படி இவருக்கு தெரிஞ்சது’என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே பிரபஞ்சன் அவளை அழைக்க மெல்ல எழுந்து பூஜை அறையை நோக்கி நடந்தாள்.
 
பூஜை அறை கச்சிதமாக நான்கு பேர் மட்டுமே நிற்கக்கூடிய அளவில் இருந்தது.பெரிதாக எந்த சாமிப் படங்களும் இல்லை.நடுவில் பெரிதாக ஒரு விநாயகர் படம் மட்டுமே இருந்தது.அதை தவிர படத்திற்கு முன் ஒரே ஒரு காமாட்சி விளக்கு மட்டும் இருந்தது.
 
“நான் இதுவரைக்கும் வீட்டுல பூஜை எல்லாம் பண்ணினது கிடையாது மித்ரா...சின்ன வயசில அம்மா செய்யும் பொழுது கூடவே அவங்க முந்தானையை பிடிச்சுக்கிட்டு சுத்தி அவங்களை வேலை செய்ய விடாம வேணும்னே தொந்தரவு செய்வேன்.அம்மா கொஞ்சம் கூட கோபமே பட்டது இல்லை.சாமிக்கு படைக்கிறதுக்கு முன்னாடி எடுத்து சாப்பிட்டு எச்சில் பண்ணிடுவேன்.
 
“இப்போ எப்படி சாமிக்கு படையல் போடுவீங்கன்னு அவங்களை கிண்டல் பண்ணுவேன்...முகத்தில் இருக்கிற சிரிப்பு கொஞ்சமும் மாறாம அம்மா பதில் சொல்வாங்க... ‘என் சாமி நீ சாப்பிட்டா...உலகத்தில இருக்கிற எல்லா கடவுளும் சாப்பிட்ட மாதிரி’அப்படின்னு சொல்லிட்டு என்னோட தலையை கலைச்சு விட்டு போவாங்க...
 
அப்ப எல்லாம் எனக்கு அம்மா தலையை கலைச்சா ரொம்ப கோபம் வரும்...அவங்க கிட்டே சண்டைக்கு போவேன்.அம்மா , அப்பா இரண்டு பேரும் இறந்த பிறகு அடிக்கடி அம்மா நியாபகம் வரும்.நானாகவே என்னோட தலையை கலைச்சு விட்டுட்டு ‘ஓன்னு கதறி அழுவேன்..அழுகாதே தம்பின்னு சமாதானம் செய்யக்கூட யாரும் வர மாட்டாங்க.
 
ஏன்னா அவங்களைப் பொறுத்தவரை நான் ஒரு பணம் காய்க்கும் மெஷின்...நான் அவங்க வீட்டுல இருந்தா மாசா மாசம் அவங்களுக்கு பணம் வரும்.எனக்கு மூணு வேளை சாப்பாடு போடுறதோட அவங்க கடமை முடிஞ்சு போச்சுன்னு நினைச்சாங்க...அப்போ எல்லாம் மனசளவுல  ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கேன் மித்ரா...”அவன் கண்களில் ஒரு வித வலியுடன் பேசிக் கொண்டே போக அவளால் தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
 
அவன் மேல் அவள் வைத்திருந்த நேசமா...இல்லை பெண்களுக்கே உண்டான தாய்மை உணர்ச்சியா எது என்று தெரியாமல் ஏதோ ஒரு சக்தி அவளைப் பிடித்து தள்ள ஆதரவாக அவனுடைய தோள் மீது கை வைத்து லேசாக அழுத்தினாள்.
 
நம்ப முடியா பிரமிப்புடன் பிரபஞ்சன் அவளை நிமிர்ந்து பார்க்க அவளோ மனதில் இருந்து பொங்கி வந்த தாயின் கருணையோடு அவனுடைய தலையை கலைத்து விளையாட அவன் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்று விட்டான்.சில நிமிடங்கள் அப்படியே கழிய கரகரத்த குரலுடன் பேசத் தொடங்கினான் பிரபஞ்சன்.
 
“விளக்கு ஏத்து மித்ரா...நல்ல நேரம் முடிய இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு.உனக்கு இங்கே பூஜை அறையில் வேற ஏதாவது சாமி படங்கள் வாங்கி வைக்கணும்னா சொல்லு.அதையும் வாங்கி வச்சிடலாம்”என்று சொல்ல மறுப்பேதும் பேசாமல் தானாகவே வந்து விளக்கை ஏற்றி விட்டு தீபாராதனை தட்டை எடுத்து அவன் புறம் நீட்ட கற்பூர சுடரை கண்களில் ஒற்றிக் கொண்டவன் குங்குமத்தை எடுத்து சங்கமித்ரா நெற்றி வகிட்டில் அழுத்தமாக பூசி விட்டான்.
 
அப்படியே நின்றவன் மேலும் எதையோ எதிர்பார்ப்பது போல அவளுக்கு தோன்ற என்ன என்று கண்களாலேயே விசாரித்தாள்.
 
“இல்லை...சாமி கும்பிட்டதும் எப்பவும் அம்மா தான் எனக்கு விபூதி பூசி விடுவாங்...”
 
அவன் பேசி முடிக்கும் முன் அவள் கைகள் விபூதியை அவன் நெற்றியில் பூசி முடித்து இருந்தது.கண்களில் பட்டு விடாமல் இருக்க ஒரு கையை நெற்றிக்கு முன்னே வைத்து இதழ் குவித்து அவள் ஊத கண்களை இமைக்க மறந்து அவளையே காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.
 
பூஜை அறையில் அவளுக்காக ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மல்லிகையை தட்டுத்தடுமாறி அவனே வைத்து விட்டான்.அவள் வேண்டாம் என்று தடுத்தாலும், “என் பொண்டாட்டிக்கு நான் தான் வச்சு விடுவேன்” என்று கூறியவன் அப்படியே செய்ய அவளுக்குள் நாணப் பூக்கள் மெல்ல மலரத் தொடங்கியது.
 
மெல்ல அவளின் கரத்தோடு தன்னுடைய கரங்களை கோர்த்துக் கொண்டவன் அவளை அப்படியே அழைத்துக் கொண்டு டைனிங் டேபிளுக்கு சென்று சாப்பிட அமர வைத்தான்.நான்கு பேர் உட்கார்ந்து அமரக் கூடிய டேபிளில் ஒன்றில் அவளை அமர்த்தி விட்டு சேரில் உட்காராமல் அவளுக்கு எதிரில் டேபிளின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான்.
 
கேள்வியாக சங்கமித்ரா நிமிர்ந்து பார்க்க அவனே பதிலும் சொன்னான்.
 
“இருக்கிறது இரண்டு பேர் தானே...ஒரே தட்டில் சாப்பிட்டா...தட்டு கழுவுற வேலை மிச்சம்” என்று கூறி குறும்பாக கண் சிமிட்ட,அவனது எண்ணம் புரிந்து பொய்யாக கோபம் கொண்டு அவன் தோள்களில் விளையாட்டாக தட்டினாள் சங்கமித்ரா.
 
“என்னடி குஜிலி...இதுக்கே இப்படி அடிக்கிற...நாளையில் இருந்து தண்ணியை மிச்சம் பண்ண ரெண்டு பெரும் ஒண்ணா சேர்ந்து குளிக்கணும்ன்னு முடிவு பண்ணி இருக்கேனே...”முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு அவன் பேச அவள் முகமோ நொடியில் சிவந்து போனது.
 
“சீ...பேச்சைப் பார்” என்றவள் சட்டினி கரண்டியால் அவன் தலையில் ஒரு போடு போட பயந்தவன் போல கத்தி கதறினான் பிரபஞ்சன்.
 
“கட்டுன புருஷனை...அதுவும் கல்யாணம் முடிஞ்ச இரண்டே நாளில்...அதை விட முக்கியம் போலீஸ் ஏசிபியை போட்டு இந்த அடி அடிக்கறாளே...இந்த அநியாயத்தை கேட்க ஊரில் ஆளே இல்லையா? முதல்ல நாட்டுல இருக்கிற ஆண்கள் எல்லாரும் ஒண்ணு சேர்ந்து போராட்டம் பண்ணனும்.
 
கல்யாணம் ஆன காளையர்கள் சங்கம்ன்னு ஒண்ணு ஆரம்பிச்சு...இந்த கரண்டி,பூரிக்கட்டை இதையெல்லாம் அபாயகரமான ஆயுதம் அறிவிக்க சொல்லணும்.அப்போ தான் உங்ககிட்டே இருந்து எல்லாம் தப்பிக்க முடியும் போல”என்றான் முகத்தில் இருந்த சிரிப்பு கொஞ்சமும் மாறாமல்...
 
அவன் பேசப் பேச சிரித்துக்கொண்டே விளையாட்டாக கரண்டியில் அவனை அடித்துக் கொண்டு இருந்தவள் இப்பொழுது கரண்டியை தூக்கி போட்டு விட்டு கையால் அவன் முடியை கொத்தாக பற்றிக் கொண்டு உலுக்கி எடுத்தாள்.
 
பிரபஞ்சனோ அவளது செயல்களை எல்லாம் ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தான்.
 
“என்னோட சீனியர் ஆபீசர் அப்பவே சொன்னாரு...கல்யாணம் பண்ணாதே மேன்...அப்புறம் உன் குடுமி உன் பொண்டாட்டி கைல சிக்கிக்கும்ன்னு சொன்னாரு.அனுபவஸ்தன் போல...அவர் பேச்சை கேட்டு இருக்கணும்...இப்போ பாரு...அவர் சொன்னது உண்மை ஆகிடுச்சு”என்று சிரித்துக் கொண்டே கூறியவன் அதற்கும் பல அடிகளை அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டான்.
 
அவள் அடித்த அடிகளை எல்லாம் ஏதோ அவார்ட் கொடுத்தது போல இன்பமாக வாங்கிக் கொண்டவன் விளையாடிய படியே அவளுக்கும் ஊட்டி விட்டு,தனக்கும் உணவை அவளையே ஊட்டி விட வைத்தான் பிரபஞ்சன்.

காலையில் அவளுக்கு முன்பே எழுந்து இட்லி ஊற்றி,தக்காளி சட்னி அரைத்ததை ஏதோ விண்வெளிக்கு போய் வந்தது போல ஏற்ற இறக்கங்களோடு அவன் கூற சங்கமித்ரா கண்களில் இருந்து கண்ணீர் வரும் அளவுக்கு சிரித்தாள்.இத்தனை நேரம் சங்கமித்ராவின் மனம் முழுக்க மகிழ்ச்சி மட்டுமே நிரம்பி இருந்தது.அவனைத் தவிர அவளது கவனம் வேறு எங்கும் செல்லாதவாறு கவனத்துடன் நடந்து கொண்டான் பிரபஞ்சன்.
 
மதியம் வரை ஏதேதோ கதைகள் பேசினான்.அவளையும் பேச வைத்தான். தன்னுடைய சிறு வயது குறும்புகள் அனைத்தையும் ரசனையுடன் அவளிடம் பகிர்ந்து கொண்டான்.
பேச்சு வாக்கில் அவளது மடியில் தலை சாய்த்துக் கொண்டவன் காமமின்றி அவளை தொட்டு பேசினான்.அந்த நேரத்தில் எல்லாம் அவள் முகத்தில் வந்து போன மாற்றங்களை எல்லாம் நன்றாக கவனித்தான்.சங்கமித்ராவின் முகத்தில் அருவருப்போ,அசூசையோ காணப்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டவன் மதிய உணவிற்கு வெளியே அவளை ஹோட்டலுக்கு அழைத்து செல்வதாக கூறி கிளம்ப சொன்னான்.
 
முதன்முறையாக ஒன்றாக சேர்ந்து வெளியே கிளம்புவதால் அவனே வந்து ஒரு அழகான மஞ்சள் நிற சுடிதாரை தேர்ந்தெடுத்து கொடுக்க அவனுடைய மனதை காயப்படுத்த விரும்பாமல் அவளும் அதையே அணிந்து கொண்டு லேசான ஒப்பனைகளுடன் தயாராகி வந்தாள்.பிரபஞ்சன் என்ன தான் அவளை சீண்டினாலும் அதை எல்லாம் மிகுந்த கவனத்துடன் தான் செய்து வந்தான்.
 
அவளிடம் எதிர்காலம் குறித்து அவன் எதையுமே விவாதிக்கவில்லை.இதற்கு முன்னரே எதிர்காலம் குறித்து பேசிய பொழுதெல்லாம் அவள் அவனிடம் ஆத்திரப்பட்டது அவனுடைய நினைவில் நன்றாகவே பதிந்து இருந்தது.சங்கமித்ராவும் பிரபஞ்சனின் இளமைப் பருவத்தை பற்றி கேட்டதால் கொஞ்சம் மனம் நெகிழ்ந்து இருக்க அதை அவன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைந்தான்.
 
அலங்காரப் பதுமையாக வந்த சங்கமித்ராவை விழிகள் தெறித்து வெளியே வருவது போல வைத்த கண் வாங்காமல் பார்த்தவன் அவளின் முகத்தில் பதட்டத்தை காணவும் முயன்று தன்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தான்.கண்களால் பாராட்டை தெரிவித்தவன் உற்சாகமாக விசிலடித்தவாறு அவளை அழைத்துக் கொண்டு அவனுடைய ராயல் என்பீல்டு பைக்கில் ஏறி அமர்ந்தான்.
 
‘கார் இருக்கும் பொழுது ஏன் பைக்ல போகணும்?’ என்று எண்ணியவள் கேள்வியாக அவனைப் பார்க்க அவனோ அவளது கேள்வி புரிந்தாலும் வண்டி ஓட்டத் தயாராக அனைத்து வேலைகளும் செய்ய அவளும் மறுப்பின்றி வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
 
“என்னடா இவன் புதுப் பொண்டாட்டியை பந்தாவா கார்ல கூட்டிட்டு போகாம இப்படி பைக்ல கூட்டிட்டு போறானேன்னு யோசிக்கறியா?”
 
‘இவன் ஒருத்தன் மனசில கூட எதையும் நினைக்க விட மாட்டான்’என்று செல்லமாக சலித்துக் கொண்டவள் பதிலேதும் பேசாமல் அமைதியாக வந்தாள்.அவள் பேசாவிட்டால் அவன் அமைதியாக வந்து விடுவானா என்ன...அவனே காரணத்தை கூற ஆரம்பிக்க அவன் பேசிய வார்த்தைகளில் அவளின் காதுமடல்கள் கூசத் தொடங்கியது..வெட்கத்துடன் அவனது தோளில் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள்.
 
“வீட்டுல தான் எனக்கு பாதுகாப்பு இல்லைன்னு வெளியே கூட்டிட்டு வந்தேன் இங்கேயும் பாதுகாப்பு இல்லாம போச்சே...இப்படி வண்டி ஓட்டும் பொழுது ரோட்ல வச்சு அடிக்கறியே...என்னை பார்த்தா உனக்கு பாவமா இல்லையா பேபி”
 
“பாவமா நீங்களா...நீங்க பேசின பேச்சுக்கு...உங்களை...”
 
“நானா? நான் என்ன பேசினேன் பேபி...”மௌன சிரிப்பில் அவன் உடல் குலுங்குவதை உணர்ந்தவள் அதற்கு மேலும் அவனிடம் வாயைக் கொடுக்காமல் மௌனமாகி விட்டாள்.
 
“என்ன குஜிலி...அமைதியாகிட்ட...இன்னும் ஒருமுறை தெளிவா சொல்லட்டுமா...கொஞ்சம் கிட்ட வந்து உட்காரேன்”
 
“ஒண்ணும் வேணாம்...ஒழுங்கா ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க...கொஞ்சமாவது நல்ல பேச்சு பேசறீங்களா”
 
“அடிப்பாவி...கல்யாணம் ஆகி இரண்டு நாளில் உலகத்தில் இருக்கும் எல்லா ஆண்களும் பேசும் நல்ல பேச்சு இது ஒண்ணு தான்...வெறும் பேச்சுக்கே இப்படி சிலுத்துக்கிற...கொஞ்சமாவது மாமன் மேலே இரக்கப்படு குஜிலி...என்னை சைவப் பட்சின்னு நினைச்சுடாதே...மாமன் புல் மீல்ஸ் சாப்பிடற ஆளு...நியாபகம் இருக்கட்டும்”
 
“ஷ்...அப்பா போதுமே...விட்டா பேசிகிட்டே இருப்பீங்க போல...போதும் போதும்...கண்ணாடி வழியாக அவளின் முகச்சிவப்பு அவன் கண்களுக்கு விருந்தாக வேண்டுமென்றே வண்டியை மேடு பள்ளங்களில் ஏற்றி இறக்கியவன் அதற்கு பரிசாக அவளிடம் இருந்து சில பல அடிகளையும் பெற்றுக் கொண்டான்.
 
முழுவதும் காதலை பற்றி பேசி அவளை மிரள வைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக தான் அவள் மேல் வைத்திருக்கும் காதலை அவளிடம் சொல்லி அவளின் மனதில் பதிய வைத்தான்.
 
முதலில் ஹோட்டலுக்கு போனவர்கள் நன்றாக உண்டு முடித்ததும் அவளை அழைத்துக் கொண்டு தியேட்டருக்கு போனான்.அழகான காதல் திரைப்படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.எப்பொழுது இருவரின் கைகளும் ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொண்டது என்பது இருவருக்கும் தெரியாது.படம் ஆரம்பத்திலேயே சங்கமித்ரா தானாகவே பிரபஞ்சனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
 
படம் முடிந்ததும் இருவரும் கலகலப்பாக பேசியபடியே பீச்சிற்கு சென்று கடல் அலைகளில் விளையாடி மகிழ்ந்தனர்.ஒரு கட்டத்தில் அவள் மட்டுமே குதூகலமாக விளையாடிக் கொண்டிருக்க பிரபஞ்சன் அமைதியாகி விட்டான்.எதேச்சையாக திரும்பி கணவனை பார்த்தவள் அவனுடைய பார்வையில் மூச்சடைத்துப் போனாள்.
 
லேசாக இருள் பரவத் தொடங்கிய அந்த நேரத்தில் கணவனின் பார்வை உரிமையுடன் தன் மேனியில் படிந்து இருப்பதை கண்டவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.அவனது பார்வையை தடுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் சில கணங்கள் தடுமாறி நின்றாள் சங்கமித்ரா.
 
பிரபஞ்சனின் நிலைமையோ அதை விட மோசமாக இருந்தது.ஈர உடையில் மனைவியின் அழகு அவனை பித்தம் கொள்ள செய்தது.ஒருவேளை சங்கமித்ரா தன்னுடைய பார்வையில் கொஞ்சம் வெறுப்பை காட்டி இருந்தாலும் அவன் தன்னை சமாளித்து கொண்டிருந்து இருப்பான்.

ஆனால் அவளோ அவனை நேர்கொண்டு பார்க்கவும் முடியாமல் வெட்கத்தில் தடுமாற பெண்ணவளை இப்பொழுதே ஆலிங்கனம் செய்ய வேண்டும் என்று அவனுடைய ஆண்மை துடிக்க வேகமாக அவளின் அருகில் சென்றவன் அவளின் கைகளை இறுகப்பற்றி வண்டியில் அமர வைத்து விட்டு வண்டியை மின்னல் வேகத்தில் ஒட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
 
கணவனின் இந்த வேகம் எதனால் என்பது அவளுக்கு புரியாதா என்ன?அச்சமும் நாணமும் போட்டி போட அமைதியாக அமர்ந்து இருந்தாள் சங்கமித்ரா.வீட்டிற்குள் நுழையும் வரை இருவருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லை.இருவருக்கும் இடையில் மௌனம் மட்டுமே ஆட்சி புரிந்தது.
 
வீட்டிற்குள் புயல் போல வண்டியை கொண்டு வந்து நிறுத்தியவன் அதே வேகத்தில் அவளின் கை பற்றி வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு சென்றான்.வீட்டை திறந்த வேகத்தில் காலால் அதை எட்டி உதைத்து சாத்தினான்.அவனுடைய வேகம் அவளை மிரள செய்ய பயந்து போனவள் மெல்லிய குரலில் முணுமுணுப்பாக பேசினாள்.
 
“டிரஸ் ஈரமா இருக்கு..நான் போய் வேற டிரஸ் மாத்திட்டு வர்றேன்” என்றவள் அங்கிருந்து நகரும் முன் அவளின் கையை பற்றி ஒரு இழுப்பில் தன்னுடைய கை வளைவுக்குள் கொண்டு வந்து இருந்தான் பிரபஞ்சன்.
 
“அதுக்கு அவசியம் இல்லை” என்றவன் ஆக்ரோஷமாக அவளை அணைத்து முத்தங்களை அவளுக்கு பரிசளிக்கத் தொடங்கினான். அவனுடைய சூடான முத்தங்கள் அவளின் கழுத்து வளைவில் பதிய...அவனுடைய மனநிலை சொல்லாமலே புரிந்து போனது அவளுக்கு.இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கம் போதாமல் இன்னும்... இன்னும் அவளை தன்னுள் புதைத்துக் கொண்டான் அவன்.
 
சிற்பம் செதுக்கப்படும்...

 

Post a Comment

புதியது பழையவை