மின்மினியின் மின்சாரக் காதலன் Tamil Novels Final

 

 

 

 

 

 

 

 

 

அத்தியாயம் 40

ஒரு மாதத்திற்கு பிறகு...

“சுபத்ரா... இங்கே வாயேன்...”சலிப்பான குரலில் மனைவியை அழைத்தார் நேசமணி.

“என்னங்க...”நாற்காலியை கைகளால் உருட்டியபடி அங்கே வந்தார் சுபத்ரா. முன்பை விட உடல்நிலையில் அதிக முன்னேற்றம்.மற்றவர் உதவி இல்லாமல் நாற்காலியின் மூலம் எல்லா இடங்களுக்கும் செல்ல பழகி இருந்தார். முகத்தில் பழைய பொலிவு மீண்டிருந்தது.

“இங்கே பாரு.. நீ பெத்த சீமந்த புத்திரன் நான் சொல்ற பேச்சை கேட்க மாட்டேன்கிறான்.”

“என்னடா தங்கம்... அப்பா சொல்றத கேட்க வேண்டியது தானே...”

“அம்மா... இப்போ எதுக்கு இந்த ஏற்பாடெல்லாம்... நானும் அருந்ததியும் சந்தோசமா தான் இருக்கோம்...”

“சந்தோசமா தான் இருக்கீங்க... யார் இல்லைன்னு சொன்னது... ராத்திரியானா தனித்தனி ரூமில் படுத்துக்கிட்டு...”

“அம்மா... அவளோட மனசையும் பார்க்கணும் தானே.. அவளுக்கும் கொஞ்சம் டைம் கொடுக்கணும்மா..”

“என் பிள்ளையை நல்ல முறையில் தான் வளர்த்து இருக்கேன்னு சந்தோசமா இருக்குடா தங்கம். ஆனா இப்படியே இருந்தாலும் எதுவும் மாறாதே... அம்மாவும், அப்பாவும் உங்க நல்லதுக்குத் தானே சொல்வோம்.”

“இருந்தாலும்...” என்று யோசனையாக இழுத்தான்.

“என்ன அத்தை... என்ன சொல்றார் உங்க மகர்?” புடவை முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகியபடி அங்கே வந்த மனைவியை பார்வையால் தொடர்ந்தான்.

“ஒண்ணுமில்லே அருந்ததி.. நீ உள்ளே போ...” அவளை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றான் அக்னி.

“நீ சும்மா இருடா...” என்று அவனை அதட்டி அடக்கியவர் மருமகளின் பக்கம் திரும்பினார்.

“நீ தானேம்மா... உன்னோட பொருளை எல்லாம் உன் புருசன் ரூமில் வைக்க சொன்ன... சரி ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு பிறகு இரண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து இருக்கீங்கன்னு சின்னதா ஒரு சடங்குக்கு ஏற்பாடு செஞ்சு இருக்கோம். இவன் தயா தக்கான்னு குதிக்கிறான்”

“ஏங்க... பெரியவங்க எதை செஞ்சாலும் நம்ம நல்லதுக்காகத் தான் இருக்கும். உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. அத்தை நீங்க எல்லா ஏற்பாட்டையும் செய்ங்க” என்று சொன்னவள் கையில் வைத்திருந்த ஜூஸை குடித்தபடி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

அக்னி தான் மண்டை காய்ந்து போனான்.

‘இவ தெரிஞ்சு பேசுறாளா? இல்ல தெரியாம பேசுறாளா?’ மெதுவாக நகர்ந்து அவள் இருக்கும் இடத்திற்கு சென்றவன் அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க... கொஞ்சம் பொறுப்பாக ஜூஸை குடித்துக் கொண்டே சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்து கொண்டிருந்தாள்.

“மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?”

கட்டைக் குரலில் பாடியபடி அவனது தோள் பட்டையில் முகத்தை சாய்த்து எட்டிப் பார்த்த கண்ணனை ஆன மட்டும் முறைத்துப் பார்த்தான் அக்னி.

“உனக்கெல்லாம் வெட்கமே கிடையாதா டா?”

“ஏன் ப்ரோ?” என்றான் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு...

“சொந்தகாரனா வந்த... சரி போகட்டும் தங்கிட்டு போனு விட்டேன்... அப்புறம் உன்னோட வேலையை இந்த ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு இங்கேயே வந்து தங்கின... மூணு வேளையும் இங்கேயே சாப்பிடற.. எப்போ தான்டா வீட்டை விட்டு போவ?”

“போங்க ப்ரோ .. காமெடி பண்ணிக்கிட்டு... பாப்பா வீட்டை விட உங்க வீட்டு சாப்பாடு ரொம்ப டேஸ்ட்டா இருக்கு” என்றவன் விசிலடித்தபடி அங்கிருந்து மெல்ல நழுவி விட்டான்.

“டேய்!... மானங்கெட்டவனே...”

“எனக்கு காது கேட்கலை... ப்ரோ...”என்றவன் அருந்ததியின் அருகில் அமர்ந்து அரட்டை அடிக்கத் தொடங்கி விட்டான்.

‘எப்போ பாரு... என் பொண்டாட்டி கூடவே ஒட்டிக்கிட்டு இருக்கான். இப்படி இருந்தா நான் எப்படிடா ரொமான்ஸ் செய்றது?’ அடி வயிறு கருக கருக கண்ணனை வசை பாடிக் கொண்டிருந்தான்.

கண்ணன் அங்கிருந்து நகரவே இல்லை.

‘இவன் வேணும்னே பண்ணுறான்’ என்று பல்லைக் கடித்தவன் கடுப்புடன் அங்கிருந்து நகர... கண்ணன் தன்னுடைய சிரிப்பை உதட்டுக்குள் மறைத்துக் கொண்டான்.

அக்னி அன்றைய பகல் முழுவதும் எவ்வளவோ போராடியும் அருந்ததியிடம் தனித்து பேசவே முடியவில்லை அவனால்.

ஒரு வழியாக இரவும் வந்து விட...அக்னி, கண்ணன், அருந்ததி மூவருமாக கோவிலுக்கு சென்றனர். கோவிலுக்கு தானும் கட்டாயம் உடன் வருவேன் என்று அடம் பிடித்து காரில் முன்னால் ஏறி அமர்ந்து கொண்ட கண்ணனை முறைக்க மட்டுமே முடிந்தது அக்னியால்.

“இதுக்கு முன்னாடி தியேட்டர்க்கு வந்து இருக்கேன். ஹனிமூன் போனப்போ கூட நான் வந்தேன். கோவிலுக்கு வரக் கூடாதா?” நியாயம் பேசினான் கண்ணன்.

ஒரு வழியாக வீட்டிற்கு வந்த பிறகும் கண்ணன் அவளுடனே சுற்றிக் கொண்டிருக்க... கடுப்பாகிப் போன அக்னி... வெளியே சென்று விட்டு பத்து மணிக்குத் தான் வீடு திரும்பினான்.

“என்னடா தம்பி... இவளோ லேட்டா வர்ற.. சரி சரி.. ரூமுக்கு போ.. அருந்ததி உனக்காக காத்திருப்பா.. அவ போய் அரைமணி நேரம் ஆச்சு...” என்று சொல்ல இதமான மனநிலையுடன் அறைக்குள் நுழைந்தான். அறை முழுவதும் இருள் சூழ்ந்திருக்க விளக்கை உயிர்பிக்காமல் தட்டுத்தடுமாறி கட்டிலை அடைந்தான் அக்னி.

போர்வையை தலை முதல் கால் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருக்க... கோபத்தில் பல்லைக் கடித்தான்.

“சாப்பாட்டு ராமினு நினைச்சா... தூங்குறதுல கும்பகர்ணனை மிஞ்சிடுவா போல... என்னைக்கு தூங்குறா பாரு” அறையை சுற்றிலும் நோட்டம் விட்டான்... மிதமான மணம் வீசும் மலர்களை கொண்டு அழகாய் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மெல்லிய சிரிப்புடன் அறைக் கதவை அழுந்த மூடி விட்டு கட்டிலில் சென்று அமர்ந்தான்.

“பேபி... எழுந்திருடி... என் தங்கம்ல...” மெல்ல அவளுக்கு அருகே படுத்தவன் அவளின் காதோரம் கெஞ்சினான்.

அசைவே இல்லை..

“இவளை” என்று பல்லைக் கடித்தவன் மெல்ல அவளது போர்வைக்குள் புகுந்து கொள்ள.. அடுத்த நொடி... “அய்யோ... அம்மா” என்ற கதறல் அறை முழுக்க எதிரொலித்தது.

அங்கே இருந்து வந்த சத்தத்தில்  வீட்டினர் மொத்த பேரும் அறைக்கு வெளியே கூடி விட்டனர்.

“என்னாச்சு... கதவை திறங்க...” எல்லோர் குரலும் கலந்து ஒலிக்க... அறைக்குள் விளக்குகள் பளீரென்று எரிய... அக்னியோ நெருப்பாய் எரிந்து கொண்டிருந்தான்.

“எருமை மாடே... நீ இங்கே என்னடா செய்ற?” என்று கேட்க... கட்டிலில் சாவகாசமாக கால் நீட்டி ஒரு கையை தலைக்கு முட்டு கொடுத்தபடி படுத்திருந்த கண்ணன்... கைகளில் மல்லிகைப் பூவை சுற்றிக் கொண்டு அக்னியைப் பார்த்து விசிலடித்தான்.

“பர்ஸ்ட் நைட்டுக்கு வந்தேன் டார்லிங்”

“அருந்ததி எங்கேடா...”

“அவ எதுக்கு?... அதான் நான் இருக்கேனே?”

“நாசமா போறவனே .. இது என்னோட சாந்தி முகூர்த்தம் .. மரியாதையா கிளம்பி வெளியே போ .. சிவ பூஜையில் கரடி மாதிரி”

“என்ன டார்லிங்... ஆசை காட்டி மோசம் செய்ய பார்க்கறீங்க?”

“நானா?... என்னடா உளர்ற”நேரம் காலம் தெரியாமல் எரிச்சலை கிளப்பிக் கொண்டிருந்த கண்ணனை அடித்து அறையை விட்டு வெளியே தள்ளும் எண்ணம் லேசாக முளை விடத் தொடங்கியது அவனுக்கு.

“நீங்க தானே சொன்னீங்க.. அருந்ததி சும்மா ஊருக்காக... என்னைத் தான் ரொம்பவும் லவ் பண்ணுறேன்னு சொன்னீங்க.. அது மட்டுமா அவளை டைவர்ஸ் பண்ணிட்டு நாம இரண்டு பேரும் சேர்ந்து வாழலாம்னு சொன்னீங்க” என்று கண்ணன் பேசிக் கொண்டே போக சிலை போல உறைந்து விட்டான் அக்னி.

“கண்ணா... விளையாடாதே... வெளியே போ...”என்றவன் டென்ஷனை குறைக்க எண்ணி அருகில் இருந்த பாலை எடுத்து ஒரு மிடறு அருந்த.. கண்ணன் வேகமாக கத்தினான்.

“டார்லிங்.. எல்லாத்தையும் நீங்களே குடிச்சுடாதீங்க... எனக்கும் கொஞ்சம் வைங்க... நீங்க குடிச்ச மிச்சம்.. எனக்கு வேணும்” என்று கையில் கட்டி இருந்த மல்லிகை சரத்தை ஒரு மார்க்கமாக முகர்ந்து கொண்டே  சொல்ல... குடித்துக் கொண்டிருந்த பாலை அதிர்ச்சியில் அப்படியே கண்ணன் முகத்திலேயே துப்பி விட்டான் அக்னி.

“என்ன டார்லிங்... இப்படி செஞ்சிட்டீங்க... “சிணுங்கிக் கொண்டே முகத்தைத் துடைக்க... அக்னியோ செய்வதறியாமல் மந்திரித்து விட்டதைப் போல விழிக்கத் தொடங்கினான்.

“டேய்! கண்ணா? என்னடா ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா பேசுற? உடம்பு எதுவும் சரியில்லையா”

“எனக்கென்ன உடம்புக்கு...நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருக்கேன். அப்புறம் இன்னும் ஒரு முக்கியமான விஷயம்.. உங்களுக்குத் தான் முதல்ல சொல்றேன். மும்பைக்கு போய் ஆபரேஷன் பண்ணிட்டு பொண்ணா மாறுறதுக்கு தேவையான எல்லா தகவலும் விசாரிச்சு வச்சுட்டேன். நாளைக்கு நம்ம இரண்டு பேரும் கிளம்பி போகலாம்... திரும்பி வரும் பொழுது உங்களுக்கு பிடிச்ச மாதிரி நான் மாறி இருப்பேன்.”

“கண்ணாஆஆஆ”

அது மட்டுமில்லாம என்னோட வேலையை ராஜினாமா பண்ணிட்டேன்”

“கண்ணாஆஆஆ”

“என்னோட பேர்ல இருக்கிற சில சொத்தை வித்து... அந்தமான்ல ஒரு வீடு வாங்கிட்டேன்... நாம இரண்டு பேரும் அங்கே போய்டுவோம்...எல்லாரும் நம்மள உள்ளூர்ல தான் தேடுவாங்க... அங்கே யாரும் தேட மாட்டாங்க... அங்கே போய் நம்ம வாழ்க்கையை நிம்மதியா சந்தோசமா வாழலாம்.”

“கண்ணாஆஆஆ”

“இங்கே இருந்து கிளம்பும் பொழுது எல்லாருக்கும் சுருக்கமா ஒரு லெட்டர் எழுதி வச்சிடலாம்”

“கண்ணாஆஆஆ”

“இந்த அருந்ததியை நினைச்சா தான் கொஞ்சம் பாவமா இருக்கு... பரவாயில்லை... கொஞ்ச நாள் அழுதுட்டு அப்புறம் அவளே மறந்துட்டு வேற வேலையை பார்க்க ஆரம்பிச்சுடுவா”

“கண்ணாஆஆஆ”

“உங்களுக்கும் சேர்த்து நானே யோசிச்சு எல்லாத்தையும் ரெடி பண்ணி இருக்கேன். இன்னிக்கு ஒருநாள் நைட் மட்டும் பொறுத்துக்கோங்க... விடிஞ்சதும் கிளம்பிடலாம்.”

“கண்ணாஆஆஆ”

“அப்புறம் அருந்ததிக்கு நைட் அவ சாப்பிட்ட சாப்பாட்டில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துட்டேன். அவ நாளைக்கு மதியம் தான் எழுந்திருப்பா...”

அதுநேரம் வரை அவன் பேச்சை மந்திரித்து விட்டதைப் போல கேட்டுக் கொண்டிருந்தவன் இந்த வாக்கியத்தில் அவன் மேலே பாய்ந்து விட்டான்.

“என்னடா செஞ்ச அவளை...”

“அதான் சொன்னேனே... உங்களுக்கு என்னைக் கட்டிக்க ஒரு சாக்கு வேணும். அதுக்குனு இப்படியா?” என்று சிணுங்க... அவனிடம் இருந்து பதறி விலகினான் அக்னி.

“எருமை மாடே.. எங்கேடா அவ... என்ன செஞ்சு தொலைச்சே?”

எனக்குப் புரியுது... இந்த அருந்ததியால நம்ம சந்தோசமான வாழ்க்கைக்கு தொல்லைன்னு... இன்னிக்கு மட்டும் தானே... நாளையில் இருந்து அவ மூஞ்சியிலேயே நீங்க முழிக்க வேண்டாம்.”

“கண்ணா. நீ மட்டும் இப்போ ஒழுங்கா அவ எங்கே இருக்கானு சொல்லலை... கொன்னுடுவேன் உன்னை” என்று கோபத்தோடு நெருங்கியவன் அவனது கழுத்தைப் பிடிக்க... பதிலுக்கு கண்ணனும் அவனோடு உருண்டு சண்டை இட... அந்த நேரம் வாசல் கதவை பட்டென்று திறந்து கொண்டு வீட்டினர் எல்லோரும் உள்ளே வந்து இருந்தார்கள்.

கட்டிலில் இருவரும் இருந்த கோலத்தைக் கண்டு உறவினர்கள் எல்லோரும் திகைத்து விழித்தவர்கள்... அருந்ததி முன்னே வந்து இருவரும் இருந்த கோலத்தைப் பார்த்து விட்டு தலையில் அடித்துக் கொள்ள.. மொத்த கூட்டமும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கியது.

“மாப்பிள்ளைக்கு அம்புட்டு வெறி...”கூட்டத்தில் மீண்டுமாய் சிரிப்பு...

“ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா?” சிரிப்பலை தொடர்ந்தது.

அக்னி வேகமாக எழுந்தவன் கொஞ்சம் சங்கடத்துடன் அருந்ததியைப் பார்த்து சிரித்து வைத்தான்.

“நல்ல வேளை பாப்பா... நீ வந்த.. அதனால என் கற்பு பறிபோகல... அருந்ததி சாமி கும்பிட்டுட்டு இருக்கா... இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவான்னு தான் சொல்ல வந்தேன்... ஆனா அதுக்குள்ளே...”கண்களை கசக்கிக் கொண்டு அழுதவனை வெறி கொண்டு முறைத்தான் அக்னி.

“எத்தனை நாள் என்னை கதற விட்டீங்க... இன்னிக்கு என்னோட டர்ன்” அக்னியின் காதருகே முணுமுணுத்து விட்டு ஒன்றுமறியா பிள்ளை போல அருந்ததிக்கு பின்னால் போய் நின்று கொண்டான்.

மற்ற ஆட்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டே கிளம்பி விட அக்னி, கண்ணன், அருந்ததி மூவர் மட்டுமே மிஞ்சி இருந்தார்கள்.

“கொஞ்சம் விட்டு இருந்தா எனக்கு லிப் டு லிப் கொடுத்து இருப்பார் பாப்பா... நல்லவேளை நீ வந்த” குறைக் கண்ணால் அக்னியை பார்த்துக் கொண்டே அளந்து விட்டான்.

“நீ உள்ளே போ பாப்பா... நான் கிளம்புறேன். இதுக்கு மேல இங்கே இருந்தா உன் புருசன் என் மேல பாய்ஞ்சுடுவார் போல” என்று அக்னியைப் பார்த்து கண்ணடித்து விட்டு நகர, அக்னி அவனையே வெறியாக பார்த்து வைக்க... அவன் கைகளை பிடித்து வேகமாக இழுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டாள் அருந்ததி.

“எதுக்குங்க அவனை அப்படி வெறிச்சு பார்க்கறீங்க?”

“எல்லாம் ஒரு ஆசை தான்”என்றான் கடுவன் பூனை போல

“அய்யோ... அய்யோ.. இது தெரியாம போச்சே... நானும் என் புருசன்... உத்தம புத்திரன்... என்னை மட்டுமே விரும்புற பத்தினன்... என்னைத் தவிர வேற யாரையும் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்னு நினைச்சேனே... ஆனா கடைசியில... கடைசியில...”நெற்றியில் அறைந்து கொண்டு அழுதவளை விநோதமாக பார்த்தான் அக்னி.

“அடியே தக்காளி...என்னாச்சுடி..எதுக்கு இப்படி அழற?”

“அவன் சொன்னப்போ கூட நான் நம்பலை... ஆனா... நீ... நீங்களே உங்க வாயாலேயே சொல்லிட்டீங்க... அவன் மேல ஆசைன்னு” என்று  சொல்லி விட்டு ஏங்கி ஏங்கி அழத் தொடங்க... முதலில் புரியாமல் விழித்தவன்... புரிந்ததும் அடக்க மாட்டாமல் சிரிக்கத் தொடங்கினான்.

“அடியே! மண்டு... ஆரம்பத்துல அவனை பார்த்தப்போ எல்லாம் நான் கொஞ்சம் டீஸ் பண்ணினேன்டி. அதுக்குத் தான் என்னை இப்படி பழி வாங்கிட்டு போய் இருக்கான் அந்த ஜந்து”

“நான் நம்ப மாட்டேன்.. நீங்க இப்போ ஏதேதோ சொல்லி என்னை சமாதானம் செய்ய பார்க்கறீங்க?”

“ஏதேதோ செய்ய வேண்டிய நேரத்துல.. ஏதேதோ பேசுறதுக்கு எனக்கென்ன பைத்தியமா?” என்றவன் காதல் குரலில் மனைவியை சமாதானம் செய்ய முயன்றான்.

“நிஜமா ஒண்ணுமில்லை தானே...”கண்கள் படபடவென்று அடித்துக் கொள்ள பட்டாம்பூச்சி போல இருந்த மனைவியை கைகளில் அள்ளிக் கொண்டான் அக்னி.

நெற்றியில் அழகாய் ஒரு முத்தம்...

இதழில் அழுத்தமாய் ஒரு முத்தம்...

அவனது வேகம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்க பெண்மைக்கே உண்டான இயல்பான பயத்துடன் உடல் நடுங்கிக் கொண்டிருந்த மனைவியவளை நிமிர்ந்து பார்த்தான் அக்னி.

“நான் அக்னிடி... கோபம் வரும்பொழுது நெருப்பாய் சுடுவேன்... தாங்கிப்பியா?”

“நானும் அருந்ததீ தான்... நீங்க சுட்டா நான் கொதிப்பேன்...”

“இரண்டு பேரும் கோபப்பட்டுக்கிட்டே இருந்தா எப்போ குடும்பம் நடத்துறது?”

“இரண்டு பேரும் கோபப்பட்டா கஷ்டம் தான்.”

“என்னடி இப்படி சொல்ற?”

“இரண்டு பேரில் ஒருத்தர் இறங்கி வந்து விட்டுக் கொடுத்து போகணும். அப்போ தான் சரியா இருக்கும்.”

“நான் தப்பு செஞ்சா நீ விட்டுக் கொடு... நீ தப்பு செஞ்சா நான் இறங்கி வர்றேன்...”

“அந்தக் கதை எல்லாம் இங்கே வேண்டாம்... நீங்க தப்பு செஞ்சா நீங்க தான் இறங்கி வந்து மன்னிப்பு கேட்கணும். நான் தப்பு செஞ்சா நான் கேட்பேன்... நான் எல்லாம் பத்து வருசத்துக்கு ஒரு முறை மன்னிப்பு கேட்டாலே பெருசு... நான் ரொம்ப நல்லவ. நீங்க தான் அனேகமா தினமும் காலை பிடிச்சு கெஞ்சப் போறீங்க”

“ஹே! நான் எதுக்குடி காலை பிடிக்கணும்.. நான் கட்டிப்பிடிச்சு தான் மன்னிப்பு கேட்பேன்.” என்றவன் மோகம் ததும்பிய குரலில் அவளை அணைத்து முத்தாட...  அவனது கரங்களின் தேடலில் அருந்ததி பேச்சுக்களை தொலைத்தாள்.

இருமனமும் ஒருமித்த சங்கமம்... தேகங்களின் தேடலாய் இல்லாமல் நேசம் கொண்ட நெஞ்சங்களின் இணைப்பாய் மாறிய தேவ நொடிகள் அது.

காதலில் தொடங்கி... காமத்தில் தேங்கி...காமத்திலேயே தங்கி... மீண்டுமாய் காதல் காதலில் வந்து நின்ற அற்புத நொடிகள் அவை.

அவனை அவளுக்குள்ளும்... அவளை அவனுக்குள்ளும் புதைத்துக் கொண்ட ரகசிய நொடிகள் அவை..

ஆணும், பெண்ணும் ஒருவரிடம் ஒருவர் அடைக்கலம் ஆன உன்னத நொடிகள் அவை.

மறுநாள் காலை அழகானதொரு விடியல். இருவரும் தங்களை மறந்து உறங்கிக் கொண்டிருக்க வெளியே அறைக் கதவு தட்டப்பட.. முதலில் கண் விழித்தது  அக்னி தான்.   

“ஹேய் தக்காளி.. எழுந்திருடி வெளியே யாரோ கூப்பிடறாங்க நீ போய் குளி ..  நான் யாருனு பார்க்கிறேன்”

“இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே .. பிளீஸ்!” கொஞ்சலாய் கேட்டபடி அவன் மடியில் தலையை வைத்து படுத்துக் கொண்டாள்.

அவளை ஒரு வழியாக கெஞ்சி... கொஞ்சி குளியல் அறைக்குள் அனுப்பி வைத்தவன் கதவை திறந்து யார் என்று பார்க்க... அவனது அப்பா தான் நின்று கொண்டிருந்தார்.

“தம்பி... இந்தா காபி... குளிச்சுட்டு இரண்டு பேரும் சீக்கிரமா ஹாலுக்கு வருவீங்களாம். உங்க அம்மாவோட ஆர்டர்” என்று சிரித்த முகமாகவே சொல்லி விட்டு சென்றார்.

அறைக்குள் சென்று அவன் காபியை டேபிளில் வைத்த அடுத்த நொடி அவனுக்கு போனில் அழைப்பு வர.. எடுத்து பேசிக் கொண்டே பால்கனியில் அமர்ந்து கொண்டான்.

குளித்து முடித்து வெளியே வந்த அருந்ததி... நிதானமாய் உடையை மாற்றிக் கொண்டு காபியை அருந்தி விட்டு கீழே சென்று விட அதை அறியாதவனோ போன் பேசி முடித்து விட்டு சாவகாசமாய் அங்கே அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன இந்த தக்காளியை இன்னும் காணோம்? ஒரு மணி நேரம் குளிப்பா போல... வரட்டும்... வந்ததும் ஏதாவது கிளுகிளுப்பா செய்யணும்” என்று அவன் தான் மட்டுமே இருக்கிறோம் என்ற தைரியத்தில் வாய் விட்டே பேச... அவனது காதுப்பக்கம் உணர்ந்த சூடான மூச்சுக் காற்றில் உற்சாகம் அடைந்தவன் என்ன ஏதென்று யோசிக்காமல் அந்த உருவத்தை அப்படியே அள்ளி மடியில் போட்டுக் கொண்டான்.

ஏதோ வித்தியாசமாய் உணர்ந்து என்னவென்று கவனிக்கும் முன்னரே வாசல் பக்கம் இருந்து வந்த சத்தத்தில் அவனது பார்வை அங்கே சென்றது. ஆரஞ்சு பழத்தை கைகளால் நசுக்கி சாறு பிழிந்து ஆத்திரத்துடன் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் அருந்ததி.

“அங்கே அவ... அப்போ இங்கே” என்று அக்னி பார்வையை தன்னுடைய மடிக்கு திருப்ப... அங்கே ஒய்யாரமாய் அமர்ந்து இருந்தான் கண்ணன்.

“அய்யோ... அம்மா... எருமை...”பதறி வேகமாக அவனை தள்ளி விட முனைய... விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் கண்ணன் அக்னியின் கழுத்தை சுற்றி மாலை போல தன்னுடைய கரங்களை கோர்த்துக் கொள்ள... அறை வாசலில் இருந்து காபி டம்ளர் பறந்து வந்து அக்னியின் காலில் வந்து நங்கென்று விழுந்தது.

“ஆஆ... ஏன்டி!” என்றான் பாவமாக.

முறைத்து விட்டு வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள் அருந்ததி.

“மலைக் குரங்கே... எல்லாம் உன்னால தான்டா.. எழுந்திருடா எருமை.”

“ஏன் டார்லிங் திட்டறீங்க... நீங்க தானே கொஞ்ச நேரம் முன்னாடி கிட்டே வந்ததும் கிளுகிளுப்பா ஏதாவது செய்யணும்னு சொன்னீங்க... அதான் வந்தேன்...”

“ஆஆஆஆ... சாவடிக்கறானே.. அது என் பொண்டாட்டியை சொன்னேன் டா...”

“நான் தானே உங்க பொண்டாட்டி...”

“உன்னைக் கொல்லப் போறேன் பாரு..”

“ஹை... ஹை... நீங்க வம்பு இழுக்கும் போது நான் இப்படியா கோபப்பட்டேன்”

“என்ன தான்டா வேணும் உனக்கு?”

“நான் ஒரு அழகான சிங்கிள் பையன்.. என்னோட கண்ணு முன்னாடி இப்படி லவ் பண்ணி குஜாலா இருந்தா எனக்கு காண்டாகுது.”

“அதுக்கு?”

“எனக்கும் ஒரு நல்ல பொண்ணா பார்த்து வைங்க... இல்லேன்னா அது வரைக்கும் இப்படி தான் பண்ணுவேன்.”

“என்னடா மிரட்டுறியா?”

“அப்படி பச்சையா சொல்ல முடியாது... ஆனா அப்படித் தான்”

“செய்யலைனா...”

“அடுத்த வாரம் ஹனிமூன் டிக்கட் புக் பண்ணி இருக்கீங்க தானே... அங்கேயும் வருவேன்..” கழுத்தை கட்டிக் கொண்டு அவன் கன்னத்தில் செல்லமாக ஒரு குத்து விட்டவனை முறைத்துப் பார்த்தான்.

“அட நாசமா போறவனே...”

“இன்னும் நிறைய லிஸ்ட்ல இருக்கு...”

“வேண்டாம்டா... உனக்கு அடுத்த வாரம்  கல்யாணம்.. ரெடியா இரு...”

“ஐ!.. எங்கே பொண்ணு!.. எங்கே பொண்ணு!”

“ஏன்டா இப்படி அலையிற...”

“பாஸ் நான் எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு பொண்டாட்டியை மட்டும் தான் காதலிக்கணும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கிற நைன்ட்டிஸ் கிட்ஸ் வகையறா தெரியுமா?”

“எப்படியோ போ... கல்யாணத்துக்கு எல்லாம் ரெடி... உன்கிட்டே நாங்களே சஸ்பென்ஸ்சா இன்னிக்கு சொல்லலாம்னு இருந்தோம் . அதுக்குள்ளே நீயே குட்டையை குழப்பிட்ட... ஹனிமூன் டிக்கட் உனக்கும் உன்னோட பொண்டாட்டிக்கும் சேர்த்து தான் புக் பண்ணி இருக்கேன்”

“ஆஹா... நீ வாழ்க... நீ கொடை வாழ்க...”

“டேய்! பொண்ணைப் பத்தி எதுவுமே கேட்கல...”

“அட! பொண்ணு கிடைச்சா போதும் பாஸ்...”

“அட காய்ஞ்ச பயலே...”

“இருந்துட்டுப் போறேன். அப்படியே என்னோட பொண்டாட்டி போன் நம்பரை அனுப்பி விடுங்க...”

“அவங்க வீட்டில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்... அதெல்லாம் பேச முடியாது”

“என்ன சொன்னீங்க டார்லிங்ங்க் ”

பொண்ணோட நம்பர் உங்க அம்மா கிட்ட இருக்கு தம்பி... வாங்கிக்கோ”

“ரைட்... அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்”

“என்ன்ன்னடா”

“ஒரு வாரம் சபரி மலைக்கு மாலை போட்ட மாதிரி சமத்தா தனியா இருக்கணும். உங்க பொண்டாட்டி பக்கம் உங்க கண்ணு திரும்புச்சு... அப்புறம்”

“*##*****###@”

“ஐ டோன்ட் கேர். நான் மட்டும் தனியா இருப்பேனாம். இவங்க எல்லாம் குடும்பமா கூத்தடிப்பாங்களாம்... பதனி... பதனி...” என்று கூவிக் கொண்டே வெளியேறினான் கண்ணன்.

அக்னி எவ்வளவோ முயன்றான் அருந்ததியை சமாதானம் செய்ய... கண்ணன் குறுக்கே புகுந்து தடுத்துக் கொண்டே இருந்தான் ஒவ்வொரு முறையும். கூடவே அவனது கூவல் வேறு.

“பதனி... பதனி...”

இரவில் அறைக்குள் வந்த  அருந்ததியை சமாதானம் செய்ய முடியாமல் முழித்துக் கொண்டிருந்த அக்னி முழி பிதுங்கி நின்றான்.

“அந்த கண்ணன் கிட்டே என்னை டைவர்ஸ் பண்ணிடப் போறதா சொன்னீங்களாமே”

“இல்லடி தங்கம்...”

“இவ கூட எல்லாம் மனுசன் வாழுவானான்னு கேட்டீங்களாம்”

“சத்தியமா இல்லைடி...”

“புதுசா ஏரியாவுக்கு வந்து இருக்கிற எவளோ போலீஸ்காரியைத் தேடித் தேடிப் போய் பேசறீங்களாம்”

“இது வேறயா? இருக்கிற ஒருத்தியையே வச்சே வாழ முடியல...”

“உங்களுக்குத் தான் போலீஸ் டிபாரட்மெண்ட் பொண்ணுனா ரொம்ப பிடிக்குமே” மீண்டும் அழுவதற்கு அவள் தயாராக நொந்தே போய் விட்டான் அக்னி.

அவளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தலைக்கு கையை முட்டுக் கொடுத்து விட்டத்தை வெறித்துப் பார்க்கத் தொடங்கி விட்டான் அக்னி.

“நாடகம் விடும் நேரம் தான் உச்ச காட்சி நடக்குதம்மா”

அவனது போனுக்கு அழைப்பு வந்தது  கண்ணனிடம் இருந்து.

“பதனி... பதனி...”

“என்னடா வேணும் உனக்கு?”

“ என் ஆளு என்கிட்டே பேச மாட்டேன்கிறா”

“அதுக்கு?”

“ஒழுங்கா பேச வைங்க”

“என்னடா ஆடறியா? என்கிட்டே வச்சுக்காதே”

“டார்லிங்..” என்று அவன் ராகமாக இழுக்க .. கடுப்புடன் போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு படுத்து விட்டான்.  

ஒரு வாரம் தன்னால் முயன்ற அளவு எல்லா முயற்சியையும் செய்து அவர்களை பிரித்து வைத்தான் கண்ணன்.

ஒருவழியாக கண்ணன் மணமேடையில் அமர்ந்து இருக்க ,”பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என்ற ஐயரின் குரலில் அவன் கண்கள் பரபரப்பாக மணப்பெண்ணை தேடியது.

கண்களில் கண்ணாடி அணிந்திருந்த அந்தப் பெண்ணைக் கண்டதும் ‘ஈஈஈ’ என்று இளித்து வைத்தான்.

அந்தப் பெண் அவனை கண்டு கொள்ளவே இல்லை. மேடை ஏறும் பொழுது ஒருமுறை தவறி விழப் போக .. கண்ணன் வேகமாக எழ முயல, அதற்குள் அவளே சமாளித்து அவனுக்கு அருகில் வந்து அமர்ந்து விட்டாள்.

கண்ணன் தன்னால் முயன்ற மட்டும் ஏதேதோ குரங்கு சேட்டைகள் செய்து பார்த்தான் அந்தப் பெண் திரும்பவே இல்லை . அவனைப் பார்த்து அக்னி நமுட்டு சிரிப்பு சிரிக்க..  அவன் எங்கே அக்னியை பார்த்தான். அவன் பார்வை முழுக்க அவனின் மைனா மீது மட்டும் தான்.

தாலி கட்டி ..  மெட்டி அணிவித்து அம்மி மிதித்து அருந்ததி நட்சத்திரம் பார்ப்பது என்று எல்லா சடங்குகளையும் செய்து முடித்தாலும் ஏனோ இன்னமும் அவன் மனைவி அவன் புறம் திரும்பி ஒரு வார்த்தை கூட பேசினாள்  இல்லை.

குட்டிக் கரணம் போடாத குறையாக எல்லா சில் வண்டு வேலையையும் பார்த்தான். மொத்த மண்டபமும் சிரித்ததே ஒழிய அவள் பார்வை கொஞ்சமும் கனியவே இல்லை.

மணமக்கள் இருவரையும் ஓய்வெடுக்க தனித்தனியே அனுப்பி வைக்க முகத்தை தொங்க போட்டுக் கொண்டே மணமகன் அறைக்குள் புகுந்து கொண்டான் கண்ணன்.

அறைக்குள் அக்னி தலை சீவிக் கொண்டிருந்தான்.

‘கல்யாணம் முடிஞ்ச ப்ரோ கிட்ட கேட்டா ஏதாவது நல்ல ஐடியா தருவார்.’

“ப்ரோ ..”

“என்ன உன் பொண்டாட்டி உன்னைத் திரும்பிக் கூட பார்க்கலையா”என்றான் அடக்கி வைத்த சிரிப்புடன் .

“ஆமா ப்ரோ.. எப்படி ப்ரோ அவளை உஷார் பண்ணுறது?”

“நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் ஒண்ணும் நடக்காது மகனே”

“ஏன் ப்ரோ?” என்றான் சின்னப் பிள்ளை போல உதட்டை பிதுக்கியபடி

“அந்தப் பொண்ணுக்கு கொஞ்சமா காது கேட்காது ..  கண்ணும் கொஞ்சம் ப்யூஸ் போன பல்ப்.. பகல்ல கொஞ்சம் குத்து மதிப்பா தான் பார்வை தெரியும்”

“எதே! அப்போ நைட்?”

“அப்போ சுத்தமா கண்ணு தெரியாது .. மாலைக் கண்ணு”

“என்னதுதூதூதூ!”

“சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சு முடிச்சிரலாம்

நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்
காவிரி கங்கை ஆறுகள் போல கண்களும் இங்கே நீராட”

“ப்ரோ... பொய் தானே சொல்றீங்க?”கண்களில் கொஞ்சம் நப்பாசையுடன்

“எப்படி? பதனி.. பதனியா... இப்போ ஆப்பு எப்படி இருக்கு தம்பி?”

“ப்ரோ”

“எனக்கும் அருந்ததிக்கும் நடுவுல நீ சண்டை மூட்டி விடணும்னு நினைச்சா நடந்துடுமா? அதெல்லாம் அன்னைக்கு நைட்டே அவளை கரெக்ட் பண்ணிட்டேன்... ஹீரோடா நானு... ஏதோ போனாப் போகுதுன்னு கொஞ்சம் விட்டா என்கிட்டேயே படம் ஓட்டுறியா?”

“ப்ரோ”

“உனக்கு சந்தேகம் வரக்கூடாது ரூமுக்கு வெளியே கொஞ்சம் அடக்கி வாசிச்சேன். அதுக்குள்ளே என்னா ஆட்டம்?”

“ப்ரோ”

“எப்படி .. எப்படி? என் பொண்டாட்டியை மறந்துட்டு உன் கூட வாழணுமா? ஆபரேஷன் பண்ணிட்டு பொண்ணா மாறப் போறியா?”

“ப்ரோ”

“அதெல்லாம் கூட மறந்துடுவேன்டா அவளை விட்டு பிரிஞ்சு தனியே வர சொன்ன பார்த்தியா? அதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்டா”

“ப்ரோ”

என்னோட பர்ஸ்ட் நைட் அப்போ உள்ளே புகுந்து கலாட்டா செஞ்ச இல்ல... உனக்கு அப்படி ஒரு சம்பவமே நடக்காதுடா”

“ப்ரோ... பர்ஸ்ட் பகலா இருந்தாலும் ஓகே ப்ரோ... உங்க தம்பி தானே.. கொஞ்சம் மன்னிச்சு ஏதாவது பார்த்து பண்ணுங்க ப்ரோ”

“டேய்! அந்தப் பொண்ணுக்கு கண்ணு தெரியாதுன்னு சொல்றேன்... பரவாயில்லைன்னு சொல்ற...”

“தாலி கட்டிட்டேன் ப்ரோ... இனி செத்தாலும் அவ கூட தான்.”

“டேய்! நான் வேணா வேற நல்ல பொண்ணா பார்த்து...”

“எனக்கு என் பொண்டாட்டியே போதும்... டாட்”

“பொழைச்சுக்குவ... போ”

“ப்ரோ”

“என்னடா?”

“அந்த பர்ஸ்ட் பகல்?”

“எதே!”

“எப்படியாச்சும் ஏற்பாடு பண்ணுங்க ப்ரோ”

“டேய்! நான் உனக்கு அண்ணன்டா...”

“இன்னிக்கு ஒரு நாளைக்கு மாமாவா ப்ரொமோட் ஆகிக்கோங்க ப்ரோ” என்றான் அசடு வழிந்தபடி.

“சிறப்பா செஞ்சிடறேன்” என்ற படி நக்கல் சிரிப்புடன் அங்கிருந்து வெளியேறினான்.

 

“சுந்தரி நீயும்... சுந்தரன் நானும்

சேர்ந்திருந்தால் திருவோணம்”

அறைக்குள்ளே கொஞ்ச நேரம் ஆடிப் பாடி பொழுதை கழித்தவன் மெல்ல எழுந்து மண்டபத்தின் பொதுப் பகுதிக்கு வர... பெரும்பான்மையானவர்கள் கிளம்பி சென்று இருக்க... நெருங்கிய உறவினர்கள் அத்தனை பேரும் கூட்டமாக அமர்ந்து தங்கள் போனில் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டுஇருந்தார்கள்.

‘எல்லாரும் அப்படி என்னத்த பார்க்கிறாங்க?’ என்று லேசாக எட்டிப் பார்த்தான்.

எல்லோர் போனிலும் அவன் முகம் தான் தெரிந்து கொண்டிருந்தது.

அறைக்குள் அவனும் அக்னியும் பேசிய பேச்சுக்களை எடிட்டிங் செய்து பேக்கிரவுண்ட் மியூசிக் எல்லாம் சேர்த்து சிறப்பாக வெளியிட்டு இருந்தான் அக்னி.

“ஆத்தி... இது எப்போ நடந்துச்சு?”

“லைவ் ரிலே... கொஞ்சம் டிலே” என்றபடி அவனது தோளில் கை போட்டு நின்று கொண்டான் அக்னி.

“என்ன மாப்பிள்ளை...  அருந்ததி புருசன் கூட நைட் வரைக்கும் தாக்கு பிடிச்சார். நீ பகல்லயே ஏற்பாடு செய்ய சொல்லி இருக்க?”

“அது...”

“ஆனாலும் இவ்வளவு அவசரம் கூடாது தம்பி..”

“ஆங்!” ஆளாளுக்கு அவனுக்கு அட்வைஸ் சொல்ல இஞ்சி தின்ற குரங்கு போல முகத்தை வைத்துக் கொண்டு பாவமாக ஒரு ஓரத்தில் அமர்ந்து விட்டான் கண்ணன்.

“என்ன புது மாப்பிள்ளை ஒரே ஜாலி தான் போல?” கேலி பேசிக் கொண்டே அவனுக்கு எதிரில் அமர்ந்தான்.

“பழி வாங்கிட்டீங்க இல்ல...”

“அதுவே இப்ப தான் புரியுதா உனக்கு?”

ஒன்றும் பேசாமல் அமைதியாக எழுந்தவன் தன்னுடைய அறைக்குள் சென்று புகுந்து கொண்டான் கண்ணன்.

“பாவம் கண்ணன். அவனை இப்படி கிண்டல் அடிச்சிருக்க வேண்டாம்”அருந்ததி அவனுக்காக பரிந்து பேசினாள்.

“என்னை எல்லார் முன்னாடியும் ஜோக்கர் ஆக்கினானே... அப்போ நல்லா இருந்துச்சா உனக்கு?”

“அதுக்குனு இப்படி தான் செய்றதா? அவன் விளையாட்டுப் பிள்ளை... சின்னக் குழந்தை மாதிரி... இப்போ பாருங்க முகமே வாடிப் போச்சு...”

“இப்போ என்னடி வேணும் உனக்கு? வந்துட்டா அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசிக்கிட்டு”

“போய் அவனை சமாதானம் செஞ்சு கூட்டிட்டு வாங்க ப்ளீஸ்!”

“சும்மா எல்லாம் போக முடியாது... அவன் எனக்கு செஞ்சதை எல்லாம் மறக்கிற மாதிரி கிளுகிளுப்பா ஏதாவது கொடு... போறேன்”

“ஹுக்கும்.. ஒழுங்கா போய் அவனை சமாதானம் செய்ங்க... இல்லேன்னா நாளைக்கு ஹனிமூனுக்கு நீங்க மட்டும் தான் கிளம்பி போகணும்”

“அடியே... உனக்கு புண்ணியமா போகும்.வாயை வைச்சுக்கிட்டு சிவனேன்னு இரு... நான் போய் அந்த எருமையை சமாதானம் செஞ்சு வைக்கிறேன்” என்று சொன்னவன் கோபமாக முறைத்துக் கொண்டிருந்த மனைவியை சமாதானம் செய்து வைக்க வேண்டி இருந்ததால் வேறு வழி இல்லாமல் கண்ணனின் அறைக்கு சென்றான்.

அங்கே கண்ணன் தன்னுடைய பொருட்களை எல்லாம் சூட்கேசில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

“என்னடா கண்ணா எங்கே கிளம்பிட்ட...”

“....”

“சாமியார் ஆகிடலாம்னு முடிவு பண்ணிட்டியா?”

“....”

“என்னடா ஒண்ணுமே பேச மாட்டேங்கிற” அக்னி பேசப்பேச கண்ணன் வேண்டிய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

எதிரே அவன் மனைவி அனுராதா நின்று அவனையே மையலாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உன்னோட திங்க்ஸ் எங்கே ராது?”

“காரில் ஏத்தியாச்சுங்க” பவ்யமாக வந்தது அவள் குரல்.

அக்னி திருதிருவென்று முழித்துக் கொண்டே கண்ணனைப் பார்க்க.. அவனோ கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தான்.

“ஹே! கண்ணா... உன் பொண்டாட்டி ரொம்ப வருஷமா உன்னை காதலிக்கிறாளாம் டா. உன்னைப் பார்த்த இதே நாளில் கல்யாணத்தை வச்சுக்கணும்னு சொல்லி உன் கையால தாலி ஏறுற வரை நிறைய விரதம் எல்லாம் வேற இருந்தா... இப்ப கூட தாலி கட்டி முடிச்சதும் கோவில் பிரசாதம் வர்ற வரைக்கும் எதுவுமே சாப்பிடாம இருந்தா... அது மட்டுமா மௌன விரதம் வேற. இப்போ தான் விரதத்தை முடிச்சா” என்று அருந்ததி கலகலப்பாக பேச... கண்ணனோ சுற்றிலும் தேடி அவளை அடிப்பதற்கு எதையோ தேடி எடுத்தான்.

“பிசாசே இதை எல்லாம் முன்னாடியே சொல்ல மாட்டியா?”

“டேய்! அவர் தான்டா உனக்கு சர்ப்ரைசா இருக்கட்டும். நான் பார்த்துக்கிறேன்னு சொன்னார்”

“யாரு? உன் புருசனா? டைவர்ஸ் வேணா வாங்கி கொடுத்து இருப்பார். அந்தாளை”

“கண்ணா... கூப்பிட்டியா? ஒன்றுமறியா பிள்ளை போல முன்னே வந்து ஆஜரானான் அக்னி.

“எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே என்னை வச்சு செஞ்சு இருக்கீங்கல்ல...”

“டேய்! பொண்ணு போன் நம்பர் வாங்குனியே... அதுல பேசாம விட்டது உன் தப்பு”

“யோவ்! நான் போன் அடிச்சப்போ எல்லாம் அவ பேசவே இல்லை தெரியுமா?”

“அதுதான் தெரியுமே” என்றான் முணுமுணுப்பாக.

“நான் கிளம்புறேன்”

“டேய்! கண்ணா எங்கேடா போற.. கல்யாணம் ஆன உடனே டைவர்ஸ் வாங்குறது தப்புடா”

“எதே டைவர்ஸா? போயா... ராது வாடா நம்ம கிளம்பலாம்”

“எங்கேடா இரண்டு பேரும் கிளம்பறீங்க? இன்னும் நிறைய சடங்கு எல்லாம் இருக்கு”

“எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுக்காம நீங்க ஓய மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும் ப்ரோ... எல்லாத்தையும் நான் ஆன்லைனில் பண்ணிக்கிறேன்.”

“டேய்! நில்லுடா பேசிக்கிட்டே இருக்கும் பொழுது எங்கே ஓடுற?”

“நிக்க மாட்டேனே... ராதும்மா திரும்பி பார்க்காம வந்துடுடா.. அந்தாளு ஒரு சூனிய பொம்மை...”

“டேய்! ஓடாதடா.. இரண்டு பேரும் சேர்ந்து கிளம்பி காலையில ஹனிமூன் போகலாம்டா.”

“உன் சங்காத்தமே வேண்டாம் போய்யா” அவனது மனைவியை ஒரு நொடி கூட நிற்க அனுமதிக்காமல் அவளையும் இழுத்துக் கொண்டே ஓடினான் கண்ணன்.

“வேட்டி கழண்டுக்க போகுது டா.”

“பட்டா பட்டி போட்டு இருக்கேன் . ஹ்ம்ம்... கல்யாணம் செஞ்ச பொண்டாட்டியை இப்படி இழுத்துக்கிட்டு ஓட வைக்கிறியே ... நீ எல்லாம் நல்லா இருப்பியா மேன்” ஓடிக் கொண்டே திட்டினான் கண்ணன்.

“பதனி பதனி...”இங்கிருந்து பதில் குரல் கொடுத்தான் அக்னி.

சுற்றி உள்ள சொந்தங்கள் அத்தனை பேரும் சிரித்து மகிழ அருந்ததியும் அவள் கணவனின் தோளில் சாய்ந்து சிரிக்க...சுபத்ராவும், நேசமணியும் விழுந்தடித்துக் கொண்டு ஓடும் கண்ணனைப் பார்த்து அடக்க மாட்டாமல் சிரித்தார்கள்.

எல்லாரும் சிரிக்கிறாங்க... நாமளும் சிரிப்போமே... அழகாய்... மன நிறைவுடன்.

***** சுபம்*****

கதையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர.. madhumathibharath@gmail.com

 

 

 


Post a Comment

புதியது பழையவை