முழுமதியாகுமோ என் வெண்ணிலா 4

 

அடுத்த நாள் விடியற்காலையில் இருந்தே அந்த வீடு அமளிதுமளியானது. வீட்டிற்கு அருகில் இருக்கும் திருமண மண்டபம் என்பதால் எல்லாரும் காலை சீக்கிரமாக கிளம்பி மண்டபத்திற்கு சென்று விட அவர்கள் எல்லாரும் செல்வதற்கு வசதியாக ஒரு வேன் ஒன்றும் ஏற்பாடு செய்து வைக்கப்பட்டு இருந்தது பார்த்திபனால்.

எல்லாரும் கிளம்பி சென்று விட வேண்டுமென்றே தாமதமாக தயாரானாள் பௌர்ணமி.அவர்களின் சொந்த பந்தங்கள் யாருடனும் கலந்து பேச விரும்பாமல் தனிமையில் இருக்க எண்ணியவள் முடிந்த வரை மற்றவர்களுடன் பேச வேண்டிய பொழுதுகளை தட்டிக் கழித்தாள்.தலைவலி என்று பொய்யாக ஒரு காரணத்தை சொன்னவளை மற்றவர்கள் யாரும் தொந்தரவு செய்யாதவண்ணம் சுகன்யாவும் பார்த்துக் கொள்ள அவள் தேடிய தனிமை சுலபமாக அவளுக்குக் கிடைத்தது.

வீட்டில் உள்ள சொந்தங்கள் அனைவரும் விடியற்காலை மண்டபத்திற்கு வந்து சேர்ந்து விட, பூஜை சாமான்கள் சிலவற்றை எடுப்பதற்க்காக வீட்டிற்கு வந்த பார்த்திபன் கல்யாணத்திற்கு தயாராகி வந்த தன்னுடைய நெஞ்சுக்கு இனியவளை கண்டதும் இமைக்க மறந்து போனான்.

முதல் நாள் பயணக் களைப்பில் லேசாக அவளது தோற்றம் நலுங்கி இருந்த பொழுதே அவனால் அவளிடம் இருந்து தன்னுடைய பார்வையை திருப்ப முடியவில்லை.அப்படி இருக்கையில் சர்வ அலங்காரத்துடன் வந்தவளை ரசிக்காமல் அவனால் எப்படி இருக்க முடியும்?

ரோஜா நிற சிவப்பு பட்டில் தேவதையை மிஞ்சும் அழகுடன் வந்தவள்  அவனை ஒரே நிமிடத்தில் வீழ்த்தி விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.தனது நீண்ட கூந்தலை பின்னி அதில் சரம் சரமாய் மல்லிகையை வழிய விட்டிருந்தவள் கழுத்தில் மெல்லியதாக ஒரு சின்ன சங்கிலியை மட்டுமே அணிந்திருக்க அதுவே அவளுக்கு தனி அழகைக் கொடுத்தது. அவளது அண்ணனின் திருமண சமயத்தில் கூட அவள் தாவணி தான் அணிந்து இருந்தாள்.இன்று தான் அவளை முதன்முதலாக புடவையில் பார்க்கிறான்.

முதல் நாள் இரவு அவளை மொட்டை மாடியில் சந்தித்த பொழுது அவளை ரசிக்க மட்டுமே முடிந்தவனால் இப்பொழுது அது முடியாமல் போனது.முதல் நாள் சுடிதாரில் தெரியாத அவளது மெல்லிடை இப்பொழுது அவனுடைய கண்களுக்கு விருந்தானது.

காதல் என்ற தேவதையை பின்னுக்குத் தள்ளிவிட்டு காமம் என்ற சாத்தான் அங்கே ஆட்சி புரிய விரும்ப,பார்த்திபனின் மனமும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மன்மதன் பார்த்திபனுடைய கண் வழியாக அவனது உள்ளத்தில் புகுந்து ஆட்சியை கைப்பற்றிக் கொண்டான்..

தன்னுடைய மனைவி இவள் தான் என்பது பார்த்திபன் ஏற்கனவே முடிவு செய்த விஷயம் என்பதால் அவன் கண்கள் கொஞ்சமும் கூச்சமின்றி அவள் மேனியில் அலை பாய்ந்தது.அவள் உடலின் ஏற்ற இறக்கங்களும்,வளைவு நெளிவுகளும் அவனை பித்தாக்க, அவனால் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று சொல்வதை விட கட்டுப்படுத்த அவன் விரும்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

‘அவன் யாரை ரசிக்கிறான்...தான் விரும்பும் பெண்ணை...தன்னை விரும்பும் பெண்ணை...அப்படி இருக்க யார் அவனைத் தடுக்க முடியும்’என்று எண்ணியவனின் பார்வை சோம்பலாக அவளது அழகை தின்று தீர்த்தது.

பார்த்திபனை இன்னமும் அவள் பார்க்கவே இல்லை.வீட்டில் ஒரு சில வேலையாட்கள் தவிர அனைவரும் முன்பே கிளம்பி இருந்ததால் எதைப் பற்றிய சிந்தனையும் இன்றி தயாராகிக் கொண்டிருந்தாள் பௌர்ணமி. எனவே ஹாலில் ஜன்னல் ஓரம் பதித்து இருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்த்து ஒற்றை கீற்றாக சந்தனத்தை நெற்றியில் வைத்தவள் யாரும் இல்லை என்ற நினைவுடன் உடலை முன்னும் பின்னுமாக திருப்பி புடவை சரியாக கட்டி இருக்கிறோமா என்று பார்க்க ஒவ்வொரு முறை இடை அசைத்து அவள் திரும்பும் பொழுதெல்லாம் அவன் மனம் எக்குத்தப்பாக குதிக்கத் தொடங்கியது.

வெறுமனே பார்வையால் பருகுவதால் அவனது ஏக்கங்கள் தீர்ந்து விடுமா என்ன? அவளையே இமைக்காமல் பார்த்தபடி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான் பார்த்திபன்.அவன் நெஞ்சம் முழுக்க தாபத்தால் நிரம்பி வழிய கொதிப்பாக வெளிவந்த அவனது மூச்சுக் காற்றே அவனது மனநிலையை சொல்லாமல் சொல்ல...இளமைப் பருவத்திற்கே உரிய உணர்வுகள் கிளர்ந்து எழ...தாபத்துடன் அவளை நெருங்கினான் பார்த்திபன்.

வெளியாட்களோ,வேலையாட்களோ யாரும் அருகில் இல்லாததை உறுதி செய்து கொண்டவன் மெல்ல பூனை போல நடந்து அவளுக்கு பின்னால் வந்து நின்றான்.அவள் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டிருக்க தனக்கு பின்னால் யாரோ நிற்பதைப் போல உள்ளுணர்வு தோன்றவும் வேகமாக திரும்பியவளை அதே நொடியில் பக்கத்தில் இருந்த அறைக்குள் இழுத்து சென்றவன் அவள் என்ன ஏது என்று உணரும் முன்னரே அவளின் இதழோடு இதழ் பொருத்தி தன்னுடைய முதல் முத்தத்தை பதித்தான் அழுத்தமாக...

திடுக்கிட்டு அதிர்ச்சியில் உறைந்து போனவள் அவனை தள்ளி விட முயற்சி செய்ய,தாபத்தின் பிடியில் இருந்த பார்த்திபன் அதை உணரும் நிலையிலேயே இல்லை.அவன் தவிப்பு எல்லாம் இந்த நாலு வருட ஏக்கத்தை இந்த ஒற்றை இதழ் முத்தத்தின் மூலம் தீர்த்துக் கொள்வதாகவே இருந்தது.

அவள் அவனை விலக்க முயற்சி செய்ய,செய்ய அவன் அவளோடு மேலும் தீவிரமாக  ஒன்றினான்.அவனை தடுப்பதற்காக அவனை அடிக்க ஓங்கிய அவளது கைகளை இறுகப் பற்றி அவளின் முதுகுப்புறத்தில் வைத்து அழுத்தியவன் அவளை அவ்வளவு எளிதாக விடவில்லை.

அவனின் அந்த வேகத்திற்கு என்ன காரணம் என்று அவனுக்கே தெரியவில்லை...நாலு வருடம் அவளைப் பார்க்காமல் இருந்த ஏக்கமா?

முதல் நாள் இரவு தன்னுடைய கைகளுக்குள் பாந்தமாக அடங்கி தன் மேல் அவள் வைத்திருக்கும் காதலை சொல்லாமல் சொன்ன விதம் கொடுத்த தைரியமா?

வீட்டில் யாருமே இல்லாத அந்த தனிமையா?

அழகுச் சிலையென அவள் நின்றிருந்த அந்த கோலமா?

அவனுக்கு தெரியவில்லை.அவனுக்குத் தெரிந்ததெல்லாம் இப்பொழுது அவனது தாபத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும்.அது அவளிடம் மட்டுமே அவனால் முடியும்.

முதல் நாள் அவனை சந்தித்தப் பொழுது பொங்கி வரும் சமுத்திரமாக கண்களில் காதலை காட்டியவன் இன்றோ சுழன்று அடிக்கும் சுனாமியாகி அவளை தின்று விடத் துடித்தான்.

பௌர்ணமி கை ,கால்கள் செயலற்று விட்டதை போல ஓய்ந்து போய் அப்படியே நின்று விட்டாள்.அவனுடைய வேகம் அவளை மிரட்டியது.இதற்கு முன்பாக அவன் பேசிய பொழுதெல்லாம் ஒரு நாள் கூட இப்படி எல்லை மீறி அவன் நடந்து கொண்டதில்லை.இன்றோ அவனது வேகம் அவளை ஒன்றுமே சிந்திக்க முடியாத அளவிற்கு முடக்கிப் போட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

‘இது நாள் வரை ஒரு முறை கூட எல்லை மீறாத இவரா இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்...நான்கு வருடத்திற்கு முன்பு கூட...நான்கு வருடங்கள்’

வருடக்கணக்கு நினைவு வந்த அடுத்த நொடி தன்னிடமிருந்து அவனை பிய்த்து எடுத்து தள்ளி விட்டாள் பௌர்ணமி.கண்களில் தாகத்துடன் மீண்டும் தன்னை நெருங்க முயன்றவனை பலங்கொண்ட மட்டும் முயன்று தள்ளி  விட்டவள் அவன் சுதாரிக்க அவகாசம் கொடுக்காது வேகமாக அந்த அறையை விட்டு வெளியே ஒடி விட்டாள்.

கலங்கி சிவந்திருந்த தன்னுடைய முகத்தை தண்ணீரில் கழுவி விட்டு தன்னுடைய அழுகை கொஞ்சம் மட்டுப்பட்ட பிறகு கிளம்பி வேனில் ஏறி அமர்ந்து கொண்டாள்.முக்கிய உறவினர்கள் எல்லாரும் ஏற்கனவே சென்று இருக்க கடைசி கட்டமாக வீட்டு வேலையாட்களுடன் இணைந்து தனித்து வருபவளைக் கண்ட பார்த்திபனின் உள்ளம் கண்ணீர் சிந்தியது.

அவள் அழுதிருக்கிறாள் என்பது அவனுக்கு யாரும் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன? மௌனமாக வேனில் ஏறியவன் அவளை பார்வையிடுவதற்கு வசதியாக அவளுக்கு எதிரில் இருந்த சீட்டில் அமர்ந்து கொள்ள பௌர்ணமியோ அவன் இருந்த திசைப் பக்கம் கூட திரும்பவில்லை.

அவள் மனம் முழுக்க நெருப்பாக தகித்துக் கொண்டிருந்தது.அவனை தள்ளி  விட்டு வந்திருந்த பொழுதிலும் அவள் மனம் ஆற மறுத்தது.

‘எப்படி அவன் இப்படி நடந்து கொள்ளலாம்...யார் கொடுத்தது இந்த உரிமையை அவனுக்கு...இத்தனைக்கும் வந்ததில் இருந்தே அவனிடம் எரிந்து தான் விழுகிறேன்...அதற்குப் பிறகும் இப்படி ஒரு செயலை துணிந்து இருக்கிறான் என்றால்...இவன் ஒரு முடிவோடு தான் இருக்கிறான்.இதை வளர விடக் கூடாது’ என்று முடிவு செய்தவள் இங்கிருந்து கிளம்பும் முன் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும் என்று எண்ணியவளாய் கனத்த இதயத்துடன் அமர்ந்து இருந்தாள்.


Post a Comment

புதியது பழையவை