19
இரவு அவளுக்கு சூடாக பாலை கொண்டு வந்து கொடுத்தவன் மெல்ல அவளிடம் பேச
முயன்றான்.
“பொம்மிம்மா...இன்னைக்கு ராமன் மாமா பேசினது எதையும் மனசுல
வச்சுக்காதேடா...அவருக்கு நான் அவர் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கணும்ன்னு ஆசை..அது
நடக்காத விரக்தியில் அப்படி பேசிட்டார்.இனி அவர் இந்த வீட்டுப் பக்கம் கூட வர
மாட்டார்..சரிதானா?”
“இப்போ எதுக்கு எனக்கு விளக்கம் சொல்றீங்க?நான் எந்த விளக்கமும்
உங்ககிட்ட கேட்கலையே...”என்று மென்குரலில் பெசியவளைப் பார்த்து அவனுக்கு
அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது.
‘ஹம்..இன்னும் என் மீது இருக்கும் கோபம் குறையவில்லை போல...’என்று
எண்ணி பெருமூச்செறிந்தவன் படுக்கையை சரி செய்து விட்டு,விளக்கை அணைத்து விட்டு
அவளுக்கு முதுகு காட்டி உறங்கத் தொடங்கினான்.
அவள் உறங்காமல் அப்படியே இருந்தாலும் அவளிடம் பேச்சுக் கொடுக்க
அவனுக்கு பயமாக இருந்தது.திருமணம் முடிந்த மறுநாளே இப்படி ஒரு சூழ்நிலையில் அவளை
நிறுத்தி விட்டோமே என்ற குற்றவுணர்ச்சி அவனை வாட்டி வதைத்தது.
“தூங்கிட்டிங்களா?” அவளது மெல்லிய குரல் கேட்டு அடித்து பிடித்து
எழுந்து வேகமாக லைட்டைப் போட்டான் பார்த்திபன்.
“என்ன ஆச்சு பொம்மிம்மா...எங்கேயும் வலிக்குதா...டாக்டருக்கு போன்
செய்யட்டுமா?”என்று பதற அவளோ அவனைப் பார்த்து சிரித்தாள்.
“பகல் பூரா தூங்கினதால எனக்கு இப்பக் கொஞ்சம் கூட தூக்கம்
வரலை...அதான் பேசிட்டு இருக்கலாம்னு கூப்பிட்டேன்.அதுக்கு ஏன் இவ்வளவு
ஆர்ப்பாட்டம் செய்றீங்க?”என்று கன்னத்தில் குழி விழ சிரித்தவளைப் பார்த்து கொஞ்சம்
ஆசுவாசமானான்.
“கொஞ்சம் நேரம் டிவி போடட்டுமா பொம்மிம்மா...பார்க்கறியா?”என்று டிவி
ரிமோட்டை எடுத்தவனை முறைத்து விட்டு வேகமாக அதை வாங்கி தூக்கிப் போட்டாள்.
“ஏன்...நீங்க பாட மாட்டீங்களா?” என்று கேட்க அவள் முகத்தை கூர்ந்து
பார்த்தான் பார்த்திபன்.
‘இவ நிஜமா கேட்கிறாளா..இல்லை விளையாடுறாளா’
“ம்...சீக்கிரம் பாடுங்க...”அவள் குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு
கெஞ்ச...கொஞ்சம் கூட பிகு இல்லாமல் பாடத் தொடங்கினான்.
என்றவன் அதற்கு மேல்
பாடாமல் மௌனித்து விட்டான்.அவனது மௌனம் அவன் மனதில் இருந்த வருத்தத்தை அவளுக்கு
உணர்த்த அதற்கு அடுத்த வரியை அவள் பாடி தன்னுடைய மனதை தெரிவிக்க எண்ணினாள்
பௌர்ணமி.
என்று மென்குரலில்
காதலைக் குழைத்து அவள் பாட பார்த்திபன் அவள் பாடும் பாடலின் பொருள் உணர்ந்து
ஆச்சரியத்தோடு அவளையே இமைக்காமல் பார்க்கத் தொடங்கினான்.
“பொம்மிம்மா...”அவன்
குரல் நடக்க முடியாத ஒரு அதிசயம் நடந்து விட்ட ஆச்சரியத்தில் நெகிழ்ந்து போய்
இருந்தது.
கைகளை அவன் புறம் நோக்கி
நீட்டியவளை நம்ப முடியாமல் பார்த்தவன் அடுத்த நொடியே அவளை இறுகத் தழுவி இருந்தான்.
“என்னை மன்னிச்சுட்டியா
பொம்மிம்மா?”
“இல்லை அன்னைக்கு நடந்ததை
மறந்துட்டேன்.எனக்கு இப்போ நினைவில் இருக்கிறது எல்லாம்.என்னை தப்பா பேசின
ஒருத்தரை அடிச்சீங்களே...அது மட்டும் தான்”
“பொம்மிம்மா...அன்னைக்கு
நான் அப்படி நடந்துகிட்டதுக்கு காரணம் என்னன்னா?”
“எனக்கு அது எதுவும் தேவை
இல்லை...கண்டிப்பா இந்த நாலு வருசத்துல அது தப்பு அப்படிங்கிறது உங்களுக்கு
புரிஞ்சு இருக்கும்.அதனால தானே என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க”
“பொம்மிம்மா...இது
ஒண்ணும் கனவு இல்லையே...”தவிப்புடன் வெளிவந்தது அவன் குரல்.
“இல்லை...
இல்லை...இல்லை...”
அவளுடைய பதிலில் முகம்
மலர்ந்தவன் அடுத்த நொடியே களை இழந்து அவளை விட்டு விலகி நின்றான்.
“நான் உன் கழுத்தில் தாலி
கட்டினதுமே அதை கழட்ட முயற்சி செஞ்சியே... அந்த அளவுக்கா உனக்கு என் மேல
வெறுப்பு?”
“கழட்ட மாதிரி நடிச்சேனே
தவிர...நிச்சயம் அதை என்னால் செஞ்சு இருக்க முடியாது.என் மனசுல முதன்முதலில்
பதிந்த உருவம் உங்களோடது தான்.இந்த நாலு வருசமா எவ்வளவோ முயற்சி செஞ்சும் என்னால
உங்களை மறக்க முடியலை.எங்கே உங்க வீட்டுக்கு வந்தா என்னையும் அறியாமல் வெட்கம் கெட்டு
உங்க கிட்டே காதலை பிச்சையா கேட்டுடுவேனோன்னு பயந்து தான் நான் இங்கே வரவே
இல்லை.அதை விட என்னுடைய தன்மானத்திற்கு இழுக்கு வேற எதுவும் இல்லைன்னு நான்
நம்பினேன்.
என்னை மோசமான பெண்ணா
நினைச்சுக்கிட்டு இருக்க உங்ககிட்ட...நாலு வருசமா என்னை மறந்துட்டு நிம்மதியா
இருக்கிற உங்க கிட்டே என்னுடைய காதலை சொல்றது எனக்கு நானே செய்து கொள்ளும்
அசிங்கம்னு நினைச்சேன்.அதனால தான் உங்களை விட்டு ஒதுங்கிப் போக முடிவு செஞ்சேன்.
ஆனா நீங்க வந்த முதல்
நாள்லயே என்னோட அஸ்திவாரத்தையே ஆட்டிப் படைக்க ஆரம்பிச்சிங்க...எங்கே தொடர்ந்து
இங்கேயே தங்க நேர்ந்தா என்னையும் அறியாமல் ஏதாவது செய்து விடுவேனோன்னு பயந்து தான்
நான் ஊருக்கு கிளம்பியது.”
“நான் தாலி கட்டினது
உனக்கு பிடிக்கலையா பொம்மிம்மா?”
“அந்த நிமிஷம் என்னால
நிச்சயமா அதை ஏத்துக்க முடியலை...என்னை சந்தேகப்பட்டு பேசினவரோட ஒருத்தரோட தாலியை
நான் சந்தோசமா ஏத்துக்கிட்டு இருந்தா என்னோட மனசாட்சியே என்னைக் காறி துப்பி
இருக்கும். அந்த அளவுக்கா சுயமரியாதை இல்லாதவ நீ அப்படின்னு”
“இப்போ மட்டும்
எப்படி?”அவனுக்கு அவளது மனமாற்றதிற்க்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளும்
ஆவல் அவன் குரலில்.
“முதல்ல நான் நீங்க
பேசினதைக் கேட்டு உடைஞ்சு போய் தான் அப்படி இருந்தேன்.ஆனா அதுக்கு அப்புறம் அண்ணா
கிட்ட கேட்டு என்னோட பிறப்பைப் பத்தி தெரிஞ்சுகிட்ட பிறகு என்னால உங்க வீட்டுக்கு
ஒரு நல்ல மருமகளா இருக்க முடியுமான்னு சந்தேகம் வந்துச்சு...
அண்ணன் கல்யாணத்தப்போ
நான் தான் நேரிலேயே பார்த்தேனே...இந்த ஊரில் உங்க குடும்பத்துக்கு எவ்வளவு
மரியாதைன்னு...அப்படிப்பட்ட குடும்பத்துக்கு என்னை மாதிரி ஒருத்தி மருமகளா வர
முடியுமான்னு தவிப்பு ஒரு பக்கமும்...என்னை உங்க வீட்டில் உள்ள எல்லாரும்
முழுமனசோட ஏத்துப்பாங்களான்னு ஏக்கம் ஒரு பக்கமும் இருந்துச்சு...அதனால் தான் நான்
விலகி விலகி போனேன்”
“இப்போ மட்டும் எல்லாம்
சரியாகிடுச்சா?”
“கோவில்ல நீங்க
பேசுனது,மாமா பேசுனது,அத்தை பேசுனது...எல்லாத்தையும் ஒண்ணு விடாம
கேட்டேன்...அப்பவே புரிஞ்சு போச்சு எனக்கு”
“ஆனாலும் இன்னும் நான்
என்னோட பக்கத்தில் எந்த விளக்கமும் கொடுக்கலையே?”
“கோவிலில் நீங்க பேசுனதை
விடவா வேறு விளக்கம் வேணும்...எந்த சொந்தக்காரங்க முன்னாடி என்னை அசிங்கப்படுத்துற
மாதிரி பேசுனீங்களோ..அதே ஆட்கள் முன்னாடி என்னை கௌரவப்படுத்தின பிறகு வேற விளக்கம்
எதுவும் எனக்கு தேவையா இல்லை”
“இருந்தாலும்...”
“ஹம்...இது ஆவறது
இல்லை..நானே இறங்கி வந்து இவ்வளவு தூரம் சொல்லியும் நீங்க பழைய பல்லவியை பாடினா
என்ன அர்த்தம்...உங்களை கல்யாணம் செஞ்சதுக்கு யாராவது சாமியாரை கல்யாணம் செஞ்சு
இருக்கலாம்.”
“ஏன் பொம்மிம்மா” என்றான்
பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு...
“பின்னே நாலு வருஷ சண்டை
முடிஞ்சு நான் சமாதனத்துக்கு வந்து இவ்வளவு நேரம் ஆகுது.. இன்னும் என்னவோ கேள்வி
மேல கேள்வியா கேட்டுக்கிட்டு இருக்கீங்களே தவிர...வேற எதுவும் ஆரம்பிக்கிற மாதிரி
இல்லை.” என்று சொல்லி அவள் திரும்பி படுத்துக் கொள்ள முயல பாய்ந்து அவளைத் தடுத்து
நிறுத்தினான் பார்த்திபன்.
“பொம்மிம்மா...உனக்கு
உடம்புல அடிபட்டு இருக்கு” என்றான் கேள்வியும் தவிப்புமாக.
“அது எனக்கு தெரியாது
பாருங்க..தெரியாமத் தான் இவ்வளவு தூரம் பேசுறேனா” என்று சொல்லி விட்டு மீண்டும்
தூங்க முயல அடுத்த நொடி அவளை இறுகத் தழுவி இருந்தான் பார்த்திபன்.
அவளை மூச்சு முட்ட
அணைத்தவன் ஒரு நொடி நிதானித்து பின் மீண்டுமாக அவளின் முகம் பார்த்து கேட்டான்.
“பொம்மிம்மா ...உனக்கு
முழு சம்மதம் தானே?”
“ஊஹும்...நான் போய்
அப்பத்தாவை கூட்டிட்டு வந்து துணைக்கு படுக்க வச்சுக்கப் போறே...”என்று பேசிக்
கொண்டு இருக்கும் பொழுதே அவளது இதழ் வழி வந்த வார்த்தைகள் உறிஞ்சு எடுக்கப்பட்டது
பார்த்திபனால்.
கொலுசொலிகளும்,மெல்லிய
சிணுங்கல்களும் அறையில் நிறைந்து இருக்க பார்த்திபன் தன்னுடைய நான்கு ஆண்டு
தவிப்பை அவளிடம் தீர்த்துக் கொள்ள முயன்றான்.பௌர்ணமியோ எந்த வாழ்க்கை தனக்கு
கிடைக்கவே கிடைக்காதோ என்ற அச்சத்தில் இருந்தவள் இன்று அந்த வாழ்க்கையை தன்னுடைய
மனதுக்கு இனியவனுடன் வாழ்ந்து விட துடித்தாள்.
மறுப்புகளும்,கெஞ்சல்களும்
அங்கே புறக்கணிக்கப்பட்டு காதல்...காதல் ...காதல் மட்டுமே அந்த இடத்தை ஆட்சி
செய்தது.இதுநாள் வரை பெயரளவில் மட்டுமே அவனது துணைவியாக இருந்தவள் இன்று முதல்
உள்ளத்து அளவிலும் அவனோட வாழத் தொடங்கினாள்.
பிறைமதியாக இருந்த
அவர்களது வாழ்க்கை முழுமதியானது....
****** சுபம்****
கருத்துரையிடுக