அத்தியாயம் 2
“மாம்
.....பசிக்குது....டிபன் எடுத்து வைங்க மாம்......நான் போய் குளிச்சுட்டு
வந்துடறேன்” அழகாக தங்கையிடம் இருந்து தாயை திசை திருப்பி விட்டு தன்னுடைய
அறைக்குள் புகுந்து கொண்டான் அபிமன்யு.அவன் அப்படித்தான்.....
தங்கையை எப்பொழுதும் தலை மேல் வைத்து கொண்டாடுவான்.அவளை ஒரு வார்த்தை யாரும்
சொல்லி விட முடியாது அந்த வீட்டில்.பெற்ற தாய் தந்தையை விட அஞ்சலியும் அதிகம்
நாடுவது அபிமன்யுவைத் தான். ராஜேந்திரன் பார்வதி இருவருக்குமே மகன், மகள் மீது
இத்தனை பாசமாய் இருப்பது குறித்து எப்பொழுதும் மனதுக்குள் மகிழ்ச்சி தான்.பெற்ற
பிள்ளைகள் ஒருவர் மீது ஒருவர் அன்பாய் இருக்க வேண்டும் என்பது தானே எல்லா
பெற்றோரின் வேண்டுதலும்.
குளித்து முடித்து அறையை விட்டு வெளியே வந்தவன் நேராக டைனிங் ஹாலை நோக்கி
சென்றான்.அங்கே தனக்காக காத்திருந்த தாயை தந்தையையும் பார்த்தாலும் தங்கை இல்லாததை
கண்டவன் சேரில் அமர்ந்து அவளுக்காக காத்திருக்க தொடங்கினான்.
“அபி உனக்கு பசிக்குதுன்னு சொன்னியே....நீ முதலில் சாப்பிடு” என்று கூறியபடியே
பரிமாற முன் வந்த அன்னையை தடுத்துவிட்டு “ஒண்ணும் அவசரம் இல்லைம்மா...வெயிட்
பண்ணியே சாப்பிடறேன்.அஞ்சலி வந்துடட்டும்.....”
“அபி...அவ வரும்போது வரட்டும்...நீ இப்போ சாப்பிடு....”
“பரவாயில்லை
மம்மி.... ஐ கேன் வெயிட்”என்று கூறிவிட்டு தன்னுடைய மொபைல் போனை கையில் எடுத்து
நோண்ட ஆரம்பித்தான்.இவன் இப்போதைக்கு அஞ்சலி வராமல் சாப்பிட மாட்டான் என்று
புரிந்ததால் கணவனை நோக்கி பார்வையை திருப்பினார் பார்வதி.அவருடைய முகபாவனையை
வைத்தே அவரும் மகள் இல்லாமல் சாப்பிட மாட்டார் என்பதை புரிந்து கொண்டவர் மகளின்
அறையை நோக்கி குரல் கொடுத்தார்.
“ஏய் !!! அஞ்சலி ....சீக்கிரம் வா...அண்ணனும் அப்பாவும் சாப்பிடாம உனக்காக
வெயிட் பண்றாங்க பார்.....”
“வந்துட்டேன் மாம்....ஏன் இப்படி சத்தம் போடறீங்க.....குளிச்சு கிளம்பி வர
வேண்டாமா?????”
“உங்க அண்ணனும் இப்ப குளிச்சுட்டு தானே வந்தான்....அவன் சீக்கிரம் வரலை ....
நீ மட்டும் ஏன்டி இப்படி பாத்ரூம்குள்ள போனா ஒரு மணி நேரம் ஆக்குற.....”
“ஹ்ம்ம்ம் ....எல்லாம் உங்களால் தான் ....அண்ணனை மட்டும் நல்லா சிவப்பா
பெத்துட்டு என்னை இப்படி கறுப்பா இல்லை பெத்து வச்சு இருக்கீங்க.....அதனால கொஞ்சம்
கூட நேரம் ஆகத் தான் செய்யும் மம்மி....” சலித்துக் கொண்ட அஞ்சலி ஒன்று கறுப்பு
நிறம் கிடையாது.அவளுக்கு தன்னை விட தன் அண்ணன் அழகாக இருப்பதால் தான் வெளியே
செல்லும் பொழுதெல்லாம் எல்லோர் பார்வையும் அவர்மேல் படுகிறது என்று ஒரு
எண்ணம்.ஆனால் அப்படி அவனை சுற்றி வருபவர்கள் பெரும்பாலும் பெண்கள் என்பது மட்டும்
ஏனோ அவளுக்கு புரியாமல் போனது.
“அஞ்சு...நாளை மறுநாள் நான் வெளியூர் போறேன் ஷூட்டிங்கிற்காக இந்த முறை நீயும்
வாயேன்...நல்லா ஜாலியா இருக்கும்...உனக்கும் ஒரு சேஞ்ச் கிடைக்கும்.”
“வாவ்! எந்த ஊர் அண்ணா...ஸ்விட்சர்லாந்தா இல்லை மொரிசியஸா...எங்கே
அண்ணா....சொல்லு சொல்லு......” பரபரத்தாள் அஞ்சலி.
“ஏய்!...சொன்னதை கவனித்தாயா... இல்லையா... வெளியூர் என்று தானே சொன்னேன்....வெளிநாடுன்னா
சொன்னேன்.....இங்கே தமிழ்நாடு தான்.ஒரு கிராமத்துக்கு போறோம்....”
“சீ ....கிராமமா.....நான் வரலை போ....அங்கே சுத்தி பார்க்க என்ன
இருக்கு....”உதட்டை சுளித்து அலட்சியம் காட்டினாள் அஞ்சலி.
“என்ன அஞ்சு இப்படி சொல்ற...கிராமத்தில தான் நிறைய விஷயங்கள் மாறாம அதே
உயிர்ப்போட இருக்கு.இங்கே சென்னையில் எல்லாம் அதை நாம இழந்து ரொம்ப நாள்
ஆகிடுச்சு....காலை எழுந்ததும் வேலை வேலைன்னு ஓடுறோம்.....வீட்டில் உள்ள ஆட்களோட
நாம் செலவு செய்யும் நேரம் ரொம்பவும் கம்மி.....இங்கே நமக்கு ரெண்டு வீடு தள்ளி
இருக்கிறவங்க பேர் கூட தெரியாம எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா.......இன்னும்”
“உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....அண்ணா....ப்ளீஸ்! விட்டுடு தெரியாம சொல்லிட்டேன்....விட்டா
இன்னும் இரண்டு நாளைக்கு இதை பத்தியே பேசுவ போல ...எனக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சு
என்னை டிராப் பண்ணு வா”
“நீயே போய் இறங்கிக்க வேண்டியது தானே...அஞ்சலி வீட்டில் இத்தனை கார் இருக்குது
இல்ல... ஏன் அண்ணனை தொந்தரவு செய்யுற?” தேவை இல்லாமல் அபிமன்யுவின் நேரத்தை
விரயமாக்க கூடாதே என்ற எண்ணத்தில் பேசினார் பார்வதி.
“நோ மாம்...அண்ணன் கூட போய் இறங்கினா தான் எனக்கு கௌரவமா இருக்கும்.அண்ணனை
பார்க்கவே என்னுடைய பிரண்ட்ஸ் எத்தனை பேர்
வெயிட் பண்ணுவாங்க தெரியுமா....அதுவும் அண்ணன் கடைசியா நடந்த இந்திய அளவிலான
டான்ஸ் போட்டியில் ஜெயிச்சதுக்கு அப்பறம் எல்லாருக்கும் அண்ணன் மேல் ஒரு
பைத்தியம்....அவங்க எல்லார் முன்னாடியும் அண்ணன் கூட ஒண்ணா காரில் போய் இறங்கினா
எப்படி இருக்கும் தெரியுமா?”பெருமையில் ஜொலித்தது அவள் கண்கள்.
“நான் வேணும்னா உன்னை டிராப் பண்ணவா அஞ்சு???” என்றார் ராஜேந்திரன்.
“அதுக்கு நான் நடந்தே போய்டுவேன் டாடி”என்றாள் அஞ்சலி உணவில் கவனமாக இருப்பது
போல்.
“இதற்கு தான் மகனே நான் இந்த வீட்டில் வாயே திறப்பது இல்லை... நீயும் தெரிந்து
கொள்” என்று மகனுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்து விட்டு ஒன்றுமே
தெரியாதவர் போல சாப்பிட ஆரம்பித்தார் ராஜேந்திரன்.
பொங்கிய சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு சாப்பிட்டு முடித்தவன் தங்கை
சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக அவளுக்காக காத்திருந்தான். அவள் கிளம்பி
வந்ததும்,”மாம்....டாட் ....நான் அஞ்சுவை காலேஜில் டிராப் பண்ணிட்டு அப்படியே
அகாடமிக்கு போய்ட்டு சாயந்திரம் வரேன்....எனக்காக காத்துக் கொண்டு இருக்க வேண்டாம்
மம்மி....நான் மதியம் லஞ்சுக்கு வர மாட்டேன்” என்று காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
தங்கையின் கல்லூரி வாசலில் காரை நிறுத்தி அவள் இறங்கும் வரை காத்திருந்தவன்
அஞ்சலி டிரைவர் சீட்டுக்கு அருகில் குனிந்து ஏதோ பேச முற்படும் நேரம் அவர்களது
காரை அஞ்சலியின் தோழிகள் சூழ்ந்து நின்று கொண்டனர்.
“ஹாய் அஞ்சலி.....என்னடி....இன்னிக்கு இவ்வளவு லேட்... உனக்காக எவ்வளவு நேரமா
காத்திருக்கிறேன் தெரியுமா?...” என்று கேள்வி கேட்டாள் ஒருத்தி....கேள்வி மட்டும்
தான் அஞ்சலியிடம் ஆனால் அவளின் பார்வை இருந்தது என்னவோ அபிமன்யுவிடம் தான்.
அவர்களில் யார் முகத்தையும் நிமிர்ந்தும் பாராமல் தங்கையிடம் பேச ஆரம்பித்தான்
அபிமன்யு.
“அஞ்சு...செலவுக்கு பணம் வேணும்ன்னு கேட்டியே வீட்டில் இருந்து வாங்கிக்
கொண்டாயா?”
தோழிகளின் முக பாவனையை ரசித்தவாறே நின்று கொண்டு இருந்த அஞ்சலி அவசரமாக
தலையில் குட்டிக் கொண்டு , “அச்சோ!!! இல்லைண்ணா மறந்துட்டேன்....”
“சரி விடு பரவாயில்லை .... அதனால் என்ன!...இந்தா என்னுடைய கார்டு இன்றைக்கு
வைத்துக் கொள் .... எவ்வளவு வேணுமோ செலவுக்கு எடுத்துக்கோ” என்று கூறி அசால்ட்டாக
தன்னுடைய கிரெடிட் கார்டை தங்கையிடம் நீட்டினான்.
“தேங்க்ஸ் அண்ணா” என்று கூறி கிரெடிட் கார்டை வாங்கிக் கொண்டவள் மறக்காமல் தன்
தோழிகளை ஒரு வெற்றிப் பார்வை பார்த்து வைத்தாள். ‘பார்த்தாயா....என் அண்ணன் என்
மீது வைத்து இருக்கும் அன்பை’ என்று சொல்லாமல் சொல்லியது அந்த பார்வை.
“இன்று ஒரு நாள் தானே அபிமன்யு .... அதனால் என்ன ..... அஞ்சலியின் செலவுகளை
நான் கவனித்துக் கொள்ள மாட்டேனா?????” ஒயிலாக இடை வளைத்து இதழ் குவித்து பேசினாள்
தீபிகா அஞ்சலியின் தோழி .
அவளை திரும்பியும் பாராது , “என்ன அஞ்சு....உனது சேர்க்கை கொஞ்சமும் சரி இல்லை
போலிருக்கிறதே...அடுத்த வீட்டு ஆண்களை பேர் சொல்லி அழைக்கும் பெண் சிநேகிதிகள்
உனக்கு வேண்டாம்....இப்படி பட்டவர்களுடன் பழகி நம் குடும்ப கௌரவத்தை கெடுக்க
கூடாது அஞ்சு...இவர்களிடம் கொஞ்சம் விலகி இரு...அது தான் நம் ஸ்டேட்டஸ்க்கு நல்லது
புரிந்ததா?” என்று தங்கையிடம் அறிவுறுத்தியவன் திரும்பியும் பாராமல் அங்கிருந்து
காரை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.அருகில் இருந்த தீபிகாவின் முகம் கறுப்பதை திருப்தியாக
பார்த்துவிட்டே அங்கிருந்து மற்ற தோழிகளுடன் நகர்ந்தாள் அஞ்சலி.
காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டவன் நேராக காரை தன்னுடைய டான்ஸ் அகாடமிக்கு
செலுத்தினான்.காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு நிமர்ந்து பார்த்தான் அந்த
நான்கு மாடி கட்டிடத்தை முகம் முழுக்க
பெருமையில் ஜொலிக்க கட்டிடத்தின் உள்ளே நடக்க ஆரம்பித்தான்.எதிர்பட்டோர் அனைவரும்
மின்னலென தன்னை கடந்து செல்லும் அபிமன்யுவை விஷ் செய்தனர்.அவர்களின் “குட்
மார்னிங் மாஸ்டர்” என்ற வார்த்தைக்கு மெல்லியதொரு தலை அசைப்பை மட்டுமே பதிலாக
தந்தவன் விறுவிறுவென தன்னுடைய அறைக்கு சென்றான்.
தன்னுடைய பிரத்யேக அறைக்குள் நுழைந்தவன், அங்கிருந்த நடராஜர் திருவுருவ
சிலையை வணங்கிவிட்டு தன்னுடைய சீட்டில்
அமர்ந்தான்.அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகளை மனதுக்குள் ஒருமுறை தொகுத்து ஒரு முறை
சரி பார்த்துக் கொண்டவன் சிசி டிவியை
பார்வையிட ஆரம்பித்தான்.மொத்த கட்டிடத்தில் எல்லா இடத்திலும் கண்காணிப்பு கேமரா
பொருத்தி இருப்பதால் நடப்பது அத்தனையும் அங்கிருந்தவாறே பார்த்துக் கொண்டு
இருந்தான்.
அந்த நான்கு மாடி கட்டிடம் முழுக்க அபிமன்யுவுடையது தான். ஒவ்வொரு மாடியும்
ஒவ்வொரு பிரிவிற்காக ஒதுக்கப்பட்டு இருக்க தரைத் தளம் முழுவதும் ஆடிட்டோரியம்
மட்டும் இருந்தது.ஒவ்வொரு மாடியாக கேமராவில் பார்த்துக் கொண்டே வந்தவன்.மூன்றாவது
மாடியை கொஞ்சம் கூடுதலாக பார்வையிட்டவன் நொடி கூட தாமதிக்காமல் புயலென லிப்டை
அடைந்து மூன்றாவது மாடிக்கு சென்றான்.அங்கே நடனம் பயின்று கொண்டு இருந்த
மாணவர்களையும் மாணவிகளையும் கண்டு
கொள்ளாது ஆசிரியரின் சட்டையை கொத்தாக பற்றி ஓங்கி ஒரு அரை விட்டான் அபிமன்யு.
கருத்துரையிடுக