அத்தியாயம் 19
ஏற்கனவே ஒரு முறை உதயனோடு சுற்றி பார்த்து இருந்தாலும் காலையில் தனக்கு
கிடைக்காத மரியாதையும் கவனிப்பும் இப்பொழுது கிடைப்பதை ஒரு விதமான ஆச்சரியத்தோடு
தான் பார்த்துக் கொண்டு இருந்தாள் சஹானா.ஏனெனில் அவளை பொறுத்தவரை அபிமன்யுவின்
பேரில் அவளுக்கு அப்படி ஒன்றும் நல்ல எண்ணம் இல்லை.
அப்படி இருக்கையில் அப்படிப்பட்ட ஒருவனின் கூட வரும் பெண்ணான தனக்கு கிடைத்த
இந்த மரியாதையும் பிரமிப்பான பார்வையும் நிச்சயம் அவளுக்கு ஆச்சரியமாக தான்
இருந்தது.ஒவ்வொரு இடத்தையும் அவளுக்கு விளக்கி கொண்டே வந்தவன் எதிரில்
தென்பட்டவர்களிடம் அவளை அறிமுகப்படுத்தி வைக்கவும் மறக்கவில்லை.
அவர்களை எல்லாம் விட்டு விலகி வந்ததும் ஓரக்கண்ணால் அவளை பார்வையிட்டவன்
அவளின் மனதின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொண்டு சஹானாவிடம் பேச்சு கொடுத்தான்
அபிமன்யு.
“என்னடா இவனுக்கு போய் இவ்வளவு மரியாதையான்னு ரொம்ப யோசிக்கிற போல...”
தான் மனதில் நினைத்ததை இவன் சொல்கிறானே என்று நினைத்தாலும் அவனுடைய கேள்விக்கு
பதில் சொல்ல விரும்பாமல் அமைதி காத்தாள் சஹானா.
அவள் வாயை திறக்க மாட்டாள் என்பதை உணர்ந்து அவனே பேச தொடங்கினான். “எல்லாரும்
என்கிட்டே வேலை பார்க்கிறவங்க தானே...அப்படி பேச சொல்லி எல்லாரையும் மிரட்டி வச்சு
இருக்கேன்.”என்றான் படு கேசுவலாக
‘இவன் உண்மையை தான் சொல்கிறானா...இல்லை வேண்டுமென்றே என்னை வம்பு இழுக்கிறானா’
என்று அவனை ஒரு நிமிர்ந்து பார்த்தவள், ‘இவர்கள் சொல்லி தான் இவனை பத்தி எனக்கு
தெரியனுமா...நான் தான் ஏற்கனவே ஊரில் இவனை பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டேனே...இவர்கள்
சொன்னால் மட்டும் இவனை நான் நல்லவன்னு நம்பி விடுவேனா’ என்று நினைத்தவள் அவனோடு
வந்து நின்ற அந்த புது இடத்தை பார்வையாலேயே அலசினாள்.
காலையில் வந்த பொழுது இந்த அறையை உதயன் திறந்து காட்ட வில்லை...அந்த அறையின்
சாவி எப்பொழுதும் பாஸ்கிட்ட தான் இருக்கும் அந்த அறைக்குள் வேறு யாருக்கும் அனுமதி
கிடையாது என்று சொன்னதும் அவளின் நினைவுக்கு வந்தது.
“உள்ளே வா சஹானா” என்ற அபிமன்யுவின் குரலில் தன்னிலை மீண்டாள் சஹானா.“இந்த
ரூம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் சஹானா...இந்த அறைக்குள் இதுவரை நான் முக்கியமான நபர்களை
தவிர வேறு யாரையும் அழைத்து வந்தது
கிடையாது.இதை நீ நம்ப மாட்டன்னு தெரியும்.இருந்தாலும் எனக்கு உங்கிட்ட சொல்லணும்னு
தோணுது.” அவள் கவனிக்கிறாளா இல்லையா என்பதை பற்றி கவலை படாமல் அபிமன்யு அவன்
போக்கில் பேசிக்கொண்டு இருந்தான்.
“என் மனசுக்கு ரொம்ப டென்ஷனா இருந்தா மட்டும் தான் இங்கே வருவேன்.இங்கே
வந்ததும் என்னோட மனசு ரிலாக்ஸ் ஆகுற வரைக்கும் டான்ஸ் ஆடிக்கிட்டு இருப்பேன்.இங்கே
என்னோட அகாடமில வெஸ்டர்ன்,பரதம்,இப்படி எல்லா வகை நடனமும் சொல்லி தந்தாலும் நான்
இந்த அறையில் ஆடும் பொழுது கால் போன போக்கில் நான் பாட்டிற்கு ஆடிக் கொண்டு
இருப்பேன்.”
பேசிக்கொண்டே அறையின் முன்பகுதியில் இருந்த திரையை விலக்க அந்த அறையினை
முழுதாக பார்த்தாள் சஹானா.நட்ட நடுவில் ஆளுயர நடராஜர் சிலையும் சுற்றிலும் நடனத்
துறையில் புகழ்ப்பெற்ற நடன கலைஞர்களின் புகைப்படமும் அழகாக சுவற்றில் அழகாக
அமைக்கப் பட்டு இருந்தது.அது அனைத்தையும் ஒரு சிலிர்ப்போடு அவள் பார்த்துக் கொண்டு
இருக்க அவளின் முக பாவத்தையே கூரிய பார்வையால் அளந்து கொண்டு இருந்தான் அபிமன்யு.
“ஒரு நிமிஷம் இரு சஹானா” என்று சொன்னவன் திரும்பி நடந்து அந்த அறையின் கதவை
சாத்திவிட்டு அவளை நோக்கி திரும்பினான்.
அபிமன்யு அறைக்கதவை சாத்தியதும் அதுவரை இல்லாத பயம் அவளை ஆக்கிரமித்தது.
“இப்போ எதுக்கு கதவை சாத்தறீங்க? கதவை முதல்ல திறங்க”பயத்தோடு அவள் பின்னோக்கி
நகர்ந்தாள்.
அவளை வெறுமையான ஒரு பார்வை பார்த்தவன், “இப்போதைக்கு எனக்கு வேற எந்த தவறான
எண்ணமும் இல்லை சனா...இனி ஒருமுறை என்னை பற்றி இது போல நினைக்காதே”
அவனின் பதிலில் கொஞ்சம் அமைதி ஆனதும் மீண்டும் அவனிடம் சண்டைக்கு போட
தயாரானாள். “என் பேர் விஷ்வ சஹானா”
“என்னால அவ்ளோ பெரிய பேர் எல்லாம் சொல்லி கூப்பிட முடியாது.இந்த பேர் தான்
எனக்கு கூப்பிட வசதியா இருக்கு.”
‘எப்படியோ போய் தொலை’ என்று மனதுக்குள் நினைத்தவள் ஒன்றும் பேசாமல் அமைதி
காத்தாள்.
“இனி நீயும் இந்த அறையை பயன்படுத்திக் கொள்ளலாம் சனா..”
“ஆமாமா ...நான் செய்யுற வேலைக்கு தனி அறை அவசியம் தான்.” வெடுக்கென்று முகத்தை
திருப்பிக் கொண்டாள் சஹானா.
“சனா...கொஞ்சம் உன் கண்ணை திறந்து நல்லா பாரு...நாம இருக்கிறது என்னுடைய
கோவில்ல...நான் உனக்கு உதவ தான் நினைக்கிறேன் சனா....கொஞ்சமாவது புரிஞ்சுக்க
முயற்சி பண்ணு.”
“உன்கிட்ட இருந்து எனக்கு எந்த உதவியும் வேண்டாம்... உதவி செய்ற மாதிரி
நடிச்சு என்னை ஏமாற்ற பார்க்கிற நீ...”
“சனா தேவை இல்லாமல் வார்த்தைகளை சிதற விடாதே...எனக்கு பொறுமை ரொம்ப கம்மி.உன்
விஷயத்தில் மட்டும் தான் நான் இவ்வளவு பொறுமையாக இருக்கிறேன். வீணாக என்னுடைய
கோபத்தை தூண்டாதே”எங்கே அவளை அடித்து விடுவோமோ என்று கைகளை இறுக கட்டிக்கொண்டு
பேசிக் கொண்டு இருந்தான்.
அவளின் அலட்சியமான பேச்சில் அபிமன்யுவின் தன்மானம் சீண்டப்பட்டு
விட்டது.யாரும் இதுவரை அவனிடம் இப்படி மரியாதைக் குறைவாக பேசியதில்லை என்பதும்
அவனது கோபத்திற்கு ஒரு காரணம்.
“உங்கள் கோபம் என்னை என்ன செய்யும்? முதலில் கதவை திறங்க.நான் வெளியே போகணும்.
பூட்டின ரூம்க்கு உள்ளே உங்களை மாதிரி ஒரு பொறுக்கி கூட நானும் தனியா இருக்கிறதை
யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?”
“என்ன நினைப்பாங்க அதையும் நீயே சொல்லிடு ”
என்ன சொல்வது எப்படி சொல்வது எதை சொல்வது என்று அவள் யோசனையில் மூழ்கி இருக்க,அவளிடம்
தன்மையாக எடுத்து சொல்லலாம் என்று எண்ணி அவளை நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைத்து
முன்னேறினான் அபிமன்யு.
சில நிமிடங்களில் சுதாரித்தவள் தன்னை நோக்கி வரும் அபிமன்யுவை பார்த்ததும்
பயத்தில் கத்த தொடங்கினாள்.
“ஐயோ...யாராவது வாங்க ...என்னை காப்பாத்துங்க....”
கருத்துரையிடுக