Kadhal kathakali tamil novels 20

 

 

 

அத்தியாயம்  20

கட்டிலில் படுத்து குலுங்கி குலுங்கி அலுத்து கொண்டு இருந்தாள் விஷ்வ சஹானா. ‘அவன் எப்படி என்னிடம் இப்படி நடந்து கொள்ளலாம்?... அவனிடம் வேலை பார்த்தால் இப்படி தான் நடந்து கொள்வானா?இனி இங்கே இருக்க கூடாது.நாளை காலை அண்ணனை வரச் சொல்லி ஊருக்கு திரும்பி விட வேண்டும்’ என்று யோசித்தவள் உடனே சோர்ந்தும் போனாள். ‘இதற்கா இத்தனை பாடு!!!’

 

தன்னை இங்கே அனுப்பி வைக்க ஆரம்பத்தில் இருந்தே அண்ணன் எத்தனை கஷ்டப்பட்டு இருக்கிறார்.இப்பொழுது மீண்டும் திரும்பி கிராமத்திற்கு போய் விட்டால் இத்தனை நாள் அண்ணன் செய்த முயற்சி அத்தனையும் வீண் ஆகி விடுமே...இப்படி ஒரு நிலையில் தன்னை கொண்டு வந்து நிறுத்திய தன்னுடைய தந்தையின் மீது கொலைவெறியே வந்தது அவளுக்கு.எத்தனை முறை எண்ணி பார்த்தாலும் அன்று மாலை நடந்ததை நினைக்க நினைக்க அழுகை அதிகமாகிக் கொண்டே போனது சஹானாவிற்கு.

 

சஹானா கத்தி கூச்சல் போடுவதை பார்த்த அபிமன்யு அவளை பார்த்து உரத்த குரலில் பேசலானான்.

 

“இப்போ நீ வாயை மூட போறியா இல்லையா?”

 

“யாராவது வாங்களேன்...காப்பாத்துங்க...” என்று இடைவெளி இல்லாமல் அவனை விட்டு ஒவ்வொரு அடியாக பின்னோக்கி வைத்து சென்ற படியே கத்திக் கொண்டு இருந்தாள் சஹானா.

 

“இது சவுண்ட் ப்ரூப் ரூம் சஹானா....இங்கே நீ எவ்வளவு கத்தினாலும் வெளியே கேட்காது.”என்ற அவனின் இறுகிய குரலில் முகம் வெளிறிப் போய் அவனை பார்த்தாள் சஹானா.

“என்னை மிருகமாக்காதே சஹானா...நான் சொல்வதை காது கொடுத்து கேள்...” அடக்கப்பட்ட ஆத்திரம் அபிமன்யுவின் குரலில்.

 

“நீ எல்லாம் மனுஷனே இல்லை...இது தான் நீ உதவி செய்யும் லட்சணமா?உதவி செய்கிறேன் என்று சொல்லி என் அண்ணனை ஏமாற்றி என்னை இங்கே தங்க வைத்து இப்பொழுது இப்படி அசிங்கமாக நடந்து கொள்கிறாயே...உனக்கு வெட்கமாக இல்லை...”

 

“வேண்டாம் சஹானா...என் பொறுமையை சோதிக்காதே...”கண்களை இறுக மூடி கைகளை மேலும் இறுக்கமாக கட்டிக் கொண்டான் அபிமன்யு எங்கே அவளை அடித்து விடுவோமோ என்ற எண்ணத்தில்.

 

“சீ... வாயை மூடு...ரொம்ப நல்லவன் மாதிரி வேஷம் போடாதே...உன்னுடைய வேஷத்தை பார்த்து என் அண்ணன் வேண்டுமானால் ஏமாறலாம்.நான் ஏமாற மாட்டேன்.உன்னை பற்றி எனக்கு தெரியாதா? அங்கே ஊரிலேயே என் கையை பிடித்து இழுத்தவன் நீ ... கொஞ்சம் கூட யோசிக்காமல் எங்கள் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து வந்தவன் தானே?”

 

“போதும் சஹானா...”பல்லை கடித்து வார்த்தைகளை துப்பாத குறையாக பேசினான்.அப்பொழுதாவது சஹானா வாயை மூடிக் கொண்டு இருந்து இருக்கலாம்...எங்கே...அவன் அவ்வளவு தூரம் கோபத்தை கட்டுபடுத்திக் கொண்டு பேசியதை அவள் கொஞ்சம் கூட கவனிக்கவேயில்லை.அதற்கு காரணம் அபிமன்யுவின் மீது அவளுக்கு இருந்த தவறான கண்ணோட்டமே ஆகும்.

 

பூட்டிய தனி அறைக்குள் அதுவும் சவுண்ட் ப்ரூப் என்று தெரிந்ததும் அவளுடைய பயம் இன்னும் அதிகரித்தது.பயத்தில் என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் என்று புரியாமல் அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டே போனாள்.அவள் பேச பேச முதலில்  வருந்திய அபிமன்யு அவளின் வார்த்தைகளால் அவனுடைய தன்மானம் சீண்டப்பட கொஞ்சம் கொஞ்சமாக புலியென மாறிக் கொண்டு இருந்தான்.இதெல்லாம் உணராத சஹானா பயத்தில் அவள் பாட்டிற்கு கத்திக் கொண்டே இருந்தாள்.

 

“சரியான பொறுக்கி...எப்படா சான்ஸ் கிடைக்கும் அலையும் ஜென்மம்....சீ” வார்த்தைகளை சிதற விட்டாள் சஹானா.

 

அபிமன்யுவின் பொறுமை காற்றில் பறந்தது.ஒரே எட்டில் பாய்ந்து அவளின் தோளை பற்றினான். “வாயை மூடுன்னு சொன்னா கேட்க மாட்ட...ஏன்டி காலையில் இருந்து என் பக்கத்தில் தானே இருக்க..என் விரல் நுனியாவது உன் மேலே பட்டுச்சா?இப்ப எதுக்கு இந்த கத்து கத்துற...இதற்கு தானே” என்றவன் அவள் பயந்து  விலகும்  முன்னரே அவளை அணைத்து அவளின் இதழை முற்றுகையிட்டான்.

 

ஏற்கனவே பயத்தில் இருந்த சஹானா அவனது இந்த செய்கையில் மேலும் பயந்து அவனிடம் இருந்து விடுபட முயற்சி செய்ய அவளின் முயற்சிகளை நொடியில் தடுத்து எளிதாக சமாளித்தான். ஆரம்பத்தில் வன்மையாக அவளை காயபடுத்த வேண்டும் என்று ஆரம்பித்த அவனது செயல் தன்னவளின் மென்மையில் கரைந்து வன்மையை விடுத்து மென்மையை கையாண்டது.

 

சஹானா அவனிடம் இருந்து விலக போராட போராட அவனுடைய நெருக்கம் அதிகரித்தது.ஒரு அளவிற்கு மேல் சமாளிக்க முடியாமல் சஹானா பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய சுய உணர்வை இழந்து மயங்க தொடங்கினாள்.காதலின் முதல் முத்தத்தின் திளைப்பில் இருந்த அபிமன்யு முதலில் சஹானாவின் நிலையை அறியவில்லை.

அவளிடம் இருந்து பிரிய மனம் இல்லாமல் பூவில் இருந்து தேன் எடுக்கும் வண்ணத்து பூச்சியை போல ரசித்து ரசித்து மென்மையாக அவளது இதழை ருசித்துக் கொண்டு இருக்க அப்பொழுது தான் சஹானா உணர்வில்லாமல் துவண்டு போய் தன்னுடைய கைகளில் தொய்வதை உணர்ந்தான்.

 

மூளையில் அபாய மணி ஒலிக்க அதிர்ந்து போய் அவளை விலக்கி பார்த்தவன் மயங்கிய நிலையில் இருந்த தன்னுடைய தேவதையை பார்த்ததும் தான் அவன்  செய்த காரியத்தின் வீரியம் புரிய அப்படியே அவளை மடியில் கிடத்திக் கொண்டு சிலையென அமர்ந்து விட்டான் அபிமன்யு.

‘சே! நானா இப்படி நடந்து கொண்டேன்...அதுவும் சஹானாவிடம்...எது என் கண்ணை மறைத்தது? இவள் மீது எனக்கு ஏற்பட்ட கோபமா இல்லை காதலா? பூ போன்றவளை இப்படி காயப்படுத்தி விட்டோமே’என்று தன்னையே நொந்து கொண்டான்.

 

‘ஏற்கனவே என்னை ஏதோ வில்லனை பார்ப்பதை போல தான் பார்த்து வைப்பாள்.வந்த முதல் நாளே அவளிடம் இப்படி நடந்து கொண்டால் இனி இவள் இங்கே தங்க மறுத்து ஊருக்கு கிளம்பி விடுவாளோ?அவள் தான் சின்ன பெண் ஏதோ பயத்தில் பேசினால் என்றால் நான் இன்னும் கொஞ்சம் பொறுமையை கையாண்டு இருக்கலாமோ’ என்று காலம் கடந்து யோசித்தவன் அப்பொழுது தான் உணர்ந்தான் அவள் இன்னும் மயக்கம் தெளியாமல் இருப்பது கண்டு.

 

மடியில் படுத்து இருந்தவளை கீழே கிடத்தி விட்டு வேகமாக எழுந்து ஓடி தண்ணீரை எடுத்து அவளின் முகத்தில் தெளித்து கன்னத்தில் தட்டி அவளை தெளிய வைக்க முயற்சித்தான்.

 

மயக்கம் தெளிந்து மெல்ல கண்ணை திறந்து பார்த்தவள் தான் எப்படி மயங்கினோம் என்ற கேள்விக்கு பதிலாக எதிரில் குற்றவுணர்வுடன் நின்ற அபிமன்யுவை பார்த்ததும் முகம் எல்லாம் வெளிறிப் போய் வேகமாக அவனிடம் இருந்து இரண்டு அடி தள்ளி நின்று கண்களில் கண்ணீர் வழிய அபிமன்யுவை நோக்கி கையெடுத்து கும்பிட்டாள் சஹானா.

 

“தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க...உங்க காலில் வேணும்னாலும் விழறேன்...இனி இந்த ஊரில் இருக்க மாட்டேன்.திரும்பி எங்க ஊருக்கே போய்டறேன்....இதுக்கு முன்னாடி உங்களை திட்டினதுக்கும் இன்னிக்கு திட்டினதுக்கும் சேர்த்து வச்சு மன்னிப்பு கேட்டுக்கிறேன்.இதெல்லாம் தப்பு...மானம் போச்சுன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்...நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல என்னை விட்டுடுங்க”இரு கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக வழிய தன்னை நோக்கி கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிக் கொண்டு இருந்த சஹானாவை பார்த்ததும் அந்த நிமிடம் தன்னை அவள் ஏதோ ஒரு மூன்றாம் தர வில்லனை போல நினைக்கிறாளே என்று  அபிமன்யுவின் காதல் கொண்ட மனது சுக்கு நூறானது.

 

“சாரி  சஹானா... வெரி வெரி சாரி..ரியலி சாரி..நா...நான் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை.ஏதோ கோபத்தில்...”

 

“உங்களுக்கு கோபம் வந்தா இப்படி தான் எல்லார்கிட்டயும் நடந்து கொள்வீர்களா?”

“சத்தியமாக இல்லை சனா...நான் தீண்டிய முதல் பெண் நீதான்...உன் இடத்தில் வேறு யார் இருந்து இருந்தாலும் நிச்சயமாக இப்படி ஒரு நிகழ்வு நடந்து இருக்காது.”

 

“அப்போ என்னிடம் மட்டும் ஏன் இவ்வளவு மட்டமாக நடந்து கொண்டீர்கள்?” ஆத்திரத்திலும் அழுகையிலும் மூக்கு நுனி சிவக்க கேள்வி கேட்டாள் சஹானா.

 

“உன்னிடம் மட்டும் தான் என்னால் இப்படி எல்லாம் நடந்து கொள்ள முடியும் சஹானா...உன்னுடைய அருகாமையில் தான் என்னுடைய மூளை ஒழுங்காக வேலை செய்ய மாட்டேன் என்கிறது.உன்னை கண்டாலே தடுமாறும் இந்த புத்தி என்னை எதையும் ஒழுங்காக சிந்திக்க விட மாட்டேன் என்கிறது சஹானா.இதற்கு எல்லாம் காரணம் நான் உன் மீது வைத்து இருக்கும் காதல் தான்...அதை தவிர வேறு எதுவும் தப்பான நோக்கம் இல்லை சஹானா...ப்ளீஸ்  தயவு செய்து என்னை புரிந்து கொள்”

 

அபிமன்யு பேசிய அனைத்தையும் ஒரு வித மரத்த தன்மையுடன் கேட்டவள் அவனுக்கு பதில் சொல்லாமல் அவனை தாண்டி செல்ல முற்பட்டாள்.

 

“ப்ளீஸ் சஹானா..நான் சொல்வதை கொஞ்சம் கேள்” அவளின் பாதையை மறித்தபடி நின்று பேசினான்.

 

“நான் வீட்டுக்கு போகணும்...”.அவளின் குரலில் இன்னும் அழுகையின் சுவடு இருந்தது.

 

“இப்படியே வெளியே போக வேண்டாம் சனா..உன் முகம் எல்லாம் அழுது அழுது வீங்கி போய் இருக்கு...துடைச்சுக்கோ’ என்றவன் அசையாமல் நிற்கவும் அவனுக்கு முதுகு காட்டி நின்று முகத்தை சீர்படுத்திக் கொண்டு அறையின் வாயிலை நோக்கி விரைந்தாள்.

ஒரு பெருமூச்சுடன் அவளுக்கு வழிவிட்டு கதவை திறந்தவன் நேராக அவளை அழைத்துக் கொண்டு அவனுடைய கெஸ்ட் ஹௌசில் இறக்கி விட்டான்.அவனை திரும்பியும் பாராமல் அறைக்குள் சென்று கதவை சாத்தியவள் மறுநாள் காலை விடிந்தும் கதவை திறக்கவேயில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Post a Comment

புதியது பழையவை