அத்தியாயம்  32
“வேண்டாம் நிஷா.அது
சரிப்பட்டு வராது.நீ வேண்டுமானால் கெஸ்ட் ஹௌசில் தங்கிக் கொள் நிஷா.உனக்கு அதுதான்
வசதி”
முடிவாக சொன்னான் அபிமன்யு.
“என்ன அண்ணா இப்படி
பேசறீங்க? நிஷா நமக்காகத்
தானே இவ்வளவு தூரம் வந்து இருக்காங்க.அவங்களை எப்படி வெளியில் தங்க வைக்க முடியும்”அவனது முடிவை மாற்ற
எவ்வளவோ எடுத்து சொல்லிப் பார்த்தாள் அஞ்சலி.
“நான் ஒண்ணும் அவங்களை
ஹோட்டல்ல தங்க சொல்லலை அஞ்சலி.நம்ம கெஸ்ட் ஹௌசில் தானே தங்க சொல்லி இருக்கிறேன்.கல்யாணம்
ஆகாத பொண்ணை நம்ம வீட்டில் தங்க வைக்க கூடாது அஞ்சலி.”
“சஹானாவை மட்டும் தங்க வச்சு
இருக்கீங்க”
“சஹானாவும் நிஷாவும்
ஒன்றா? என்ன பேசுறோம்னு
புரிந்து தான் பேசறியா அஞ்சலி.நீ இன்னும் ஒண்ணும்
சின்ன குழந்தை இல்லை அஞ்சு.சில விஷயங்கள் சொன்னா புரிஞ்சுக்கோ ”அபிமன்யுவின் குரலில் கடுமை ஏறி இருந்தது.
“இவளால்
தான் அண்ணன் என்கிட்டே இவ்வளவு கோபமா பேசறார்.’ என்று எண்ணியபடி ஓரப்பார்வையால் சஹானாவை சுட்டெரித்தாள் அஞ்சலி.
“இருந்தாலும் அண்ணா...”
மேலும் பேச்சை
வளர்க்க முயற்சித்தாள் அஞ்சலி.
“போதும் அஞ்சலி இந்த பேச்சை
இதோட விடு.நிஷா உன்னுடைய பெட்டி எல்லாத்தையும் இன்னிக்கு கெஸ்ட் ஹௌசிற்கு கொடுத்து விடறேன்.நீ இப்போ உதயன் கூட பைக்கில் போய் இறங்கிக்கோ” என்றவன் பேச்சு முடிந்தது என்பது போல அங்கிருந்து சென்று விட்டான்.
அஞ்சலி தான் உள்ளுக்குள் குமைந்து போனாள்.’அகாடமியில் இவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவோ பழகிக் கொள்ளவோ முடியாது படி இவர்களுக்கு இடையில் நிஷாவை சேர்த்தாயிற்று.வீட்டிலும் நிஷாவை சேர்த்து விடலாம் என்று பார்த்தால் அது நடக்கவில்லையே’ என்று எண்ணியவாறே முகத்தை கடுப்பாக வைத்துக் கொண்டாள்.அவளின் அருகில் வந்த நிஷா மெல்லிய குரலில் கிசுகிசுப்பாக பேச ஆரம்பித்தாள்.
“இதுக்கு எல்லாம் சோர்ந்து
விடலாமா அஞ்சலி...வீட்டில் இருக்கும் நேரத்தை விட அகாடமியில் தான் அவர்கள் அதிக நேரம் இருப்பார்கள்.அப்படி இருக்கும் போது ஏன் இத்தனை கவலை உனக்கு. விட்டு தள்ளு...இங்கே பகலில் நாம் அவளை படுத்துகிற பாட்டில் இரவில் உன் அண்ணனிடம் முகம் கொடுத்துக் கூட அவள் பேச விரும்பாதபடி செய்து விடலாம்.சரிதானா?”
என்று பேசி
அவளுக்கு தெம்பூட்டினாள்.
இந்த பேச்சு வார்த்தை எதையும் அறியாத சஹானாவும் அபிமன்யுவும் காரில் சென்று அமர்ந்து அஞ்சலிக்காக காத்திருக்க தொடங்கினர்.இடையில் காரில் உள்ள கண்ணாடி வழியாக சஹானாவின் சோர்ந்த முகத்தை பார்த்த அபிமன்யு அவளிடம் பேசத் தொடங்கினான்.
“என்னடா இன்னைக்கு ரொம்ப
நேரம் ஆடினாயோ? ரொம்ப களைத்துப்
போய் இருக்க போலயே?”சஹானாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போகவே முகத்தை கொஞ்சம் கடுகடுவென வைத்துக் கொண்டே பேசத் தொடங்கினான்.
“இதோ பாரு சனா...இப்படி பதில் பேசாம இருந்து என்னை அவமானப் படுத்தாதே. உன் மனதில் நீ என்ன நினைக்கிறாய் என்று தெரிந்தால் தானே நான் பதில் பேச முடியும்?
இப்படி எதுவுமே பேசாமல் நீ மௌனமாக இருப்பதால் மட்டும் இங்கே எதுவும்
மாறப் போவதில்லை.முக்கியமாக என்னுடைய காதல்” என்றவன் சற்று
இடைவெளி விட்டு மீண்டும் பேசலானான்.
“இன்று முழுக்க உன்னிடம்
ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை சனா.எப்பொழுதும் நிஷா உன்னுடனே இருந்தாள்.இதில் வீட்டுக்கு வேறு அவளைக் கூட்டிக்கொண்டு போனால் சுத்தம்...அப்புறம் உன்னிடம் ஒரு வார்த்தை கூட பேச முடியுமோ என்னவோ? அது
தான் அவளை வர விடாமல் தடுத்து விட்டேன்.”
அபிமன்யுவின் இந்த வார்த்தைக்காகவே நிஷாவை தன்னுடைய அறையில் தங்க வைத்துக் கொள்ளலாமா என்ற விபரீத எண்ணம் சஹானாவின் உள்ளத்தில் தோன்றிய வேகத்தில் மறைந்தது.
இன்று ஒருநாள் நிஷாவுடன் கழித்ததே அவளுக்கு பெரும்பாடாக போய்விட்டது. அஞ்சலியுடன் சேர்ந்து கொண்டு எப்பொழுதும் என்னை மட்டம் தட்டி பேசுகிறாள் இல்லையென்றால் அபிமன்யுவை பற்றி மட்டமாக பேசுகிறாள் இரண்டும் அவளுக்கு எரிச்சலையே தந்தது. அதனால் அந்த முடிவை தள்ளி
வைத்தாள் சஹானா.
மூன்று மாதங்களுக்கு பிறகு....
 
சஹானா
அபிமன்யுவின் வீட்டிற்கு வந்து  மூன்று மாதங்கள்
கடந்த நிலையில் சஹானாவிடம் சில பல
மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது. அதற்கு முதல் காரணம்
நிஷா.
 
எப்பொழுதும் அபிமன்யுவை பற்றி சஹானாவிடம் தரக்குறைவாக பேசுவது,அபிமன்யுவிடம் பேசும் போது சஹானாவிற்கு பரதத்தின் அரிச்சுவடி கூட தெரியாது என்பதை போல நிஷா பேசும் போதெல்லாம் சஹானாவிற்கு உள்ளுக்குள் கோபம் கொழுந்து விட்டு எரியும்.
 
அதற்கு காரணம் சஹானாவிற்கு பரதம்  ஓரளவிற்கு
தெரியும்.அதை மேலும்
பட்டை தீட்டி மெருகேற்றுவதற்காகத் தானே அவள் இப்போது இங்கே வந்து இருப்பதே.ஆனால் இந்த நிஷா என்னவென்றால் நம்மை பற்றி வேண்டுமென்றே தப்பும் தவறுமாக சொல்கிறாளே! என்ன காரணம் என்று சிந்தித்தவளுக்கு அப்பொழுது தான் புத்தியில் ஒன்று உரைத்தது.
 
நிஷா தன்னிடம் பேசும் போது அபிமன்யுவை பற்றி தவறாக பேசுவாள்,அபிமன்யுவிடம் பேசும் பொழுது சஹானாவை பற்றி தவறாக பேசுவாள்.இப்படி ஒருவரை பற்றி மற்றொருவரிடம் எதற்காக தப்பும் தவறுமாக சொல்ல வேண்டும்? அதனால் அவளுக்கு என்ன பயன்?
 
அவள் இப்படி பேசினால் தான் அபிமன்யுவை பற்றி அவள் சொல்வது எல்லாம் உண்மை என்று நம்பி அவரை விட்டு விலகி 
செல்ல வேண்டும் என்பதை தவிர வேறு
காரணம் இதில் இருப்பதாக அவளுக்கு தெரியவில்லை.
 
அவளும் இந்த மூன்று மாதங்களும் அவனை அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டே தானே இருக்கிறாள்.மற்ற பெண்களிடம் தேவை இல்லாமல் ஒரு வார்த்தை கூட அவன் பேசியதில்லை.அவன் வம்பு செய்து பேசுவது அவனுடைய அம்மாவிடமும், அஞ்சலியிடமும் மட்டும் தான்.சஹானாவை கூட அவ்வபோது சீண்டுவானே தவிர அன்றைய நிகழ்வுக்கு பிறகு அவளை காயப்படுத்தி விடக்கூடாது என்று அவளுக்காக ஒவ்வொரு செயலையும் மிகுந்த
கவனத்தோடு  பார்த்து பார்த்து
செய்தான்.
அவ்வபோது அவன் பார்வையில் அவனையும் மீறி தெரியும் காதலை இவள் கண்டும் காணாதது போல இருந்தாலும் அவனுடைய கண்களில் பெருக்கெடுத்து ஓடிய
காதலையும் இவளை பார்க்கும் பொழுது மட்டும் அபிமன்யுவின் கண்களில் தெறிக்கும்
மின்னலையும் வேறு எந்த பெண்ணிடமும் அபிமன்யு காட்டவில்லை என்பதையும் சஹானா
உணர்ந்தே இருந்தாள்.
 இந்த மூன்று மாதத்தில் சஹானாவின் மனம் மெல்ல அபிமன்யுவின் புறம் சாயத்
தொடங்கி இருந்தது.அதற்கு காரணம் அபிமன்யுவின் கண்ணியம்.ஒரு மனிதனால் நிச்சயம்
எல்லா நேரமும் நடித்துக் கொண்டே இருக்க முடியாது இல்லையா?அவனை அருகில் இருந்து
பார்க்க பார்க்க அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் அபிமன்யுவை பிடிக்க ஆரம்பித்தது.ஆனால்
இது எதையும் அவள் வெளியே சொல்லவில்லை.
இது
அத்தனையும் மீறி சஹானாவிற்கு அபிமன்யு தன் மீது இருக்கும் நேசத்தை ஆணி அடித்தாற்
போல புரிய வைத்தது ஒரு சம்பவம்.

கருத்துரையிடுக