Kadhal kathakali Tamil novels 38

 

அத்தியாயம்  38

கண் விழித்த சஹானாவிற்கு முதலில் தான் எங்கே இருக்கிறோம் என்பதே புரியவில்லை.கண்களை தேய்த்து கொள்ளலாம் என்று நினைத்த போது பார்க்க முடிந்தது.பூட்டிய அறைக்குள் கட்டப்பட்ட நிலையில் சேரில் தான் அவளுடைய கைகள் கட்டப்பட்டு இருப்பதையே அவள் உணர்ந்தாள்.சற்று நேரம் சென்ற பிறகே மெல்ல மெல்ல சுற்றுப்புறத்தை அவளால் தெளிவாக அமர்த்தி வைக்கப் பட்டு இருந்தாள் சஹானா.

இது யாருடைய இடம்?யார் தன்னை இங்கே கடத்தி வந்தது என்று பல்வேறு சிந்தனைகள் அவளுக்குள் ஓடிக் கொண்டு இருந்தது.அந்த ஆட்டோவில் ஏறிய அடுத்த நொடியே தன்னுடைய முகத்தில் மயக்க மருந்து தெளித்த கர்சிப்பை யாரோ வைத்து அழுத்தியது நினைவுக்கு வந்தது.தன்னுடைய எண்ணங்களில் மூழ்கி இருந்தவளை கலைத்தது கதவு திறக்கும் ஒலி.கதவை திறந்து கொண்டு அறைக்குள் புதியவன் ஒருவன் வந்தான்.

 

என்ன முழிச்சுட்டியா?...நல்லது எனக்கும் உன்னை எழுப்பும் வேலை மிச்சம்.என்னடா இவன் பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கானே யார் இவன்னு யோசிக்கிட்டு இருக்கியா?என் பேர் கிரி...கேள்விப்பட்டு இருப்பியே...அது நான் தான்” தெனாவெட்டாக பேசினான் அவன்.

 

இதற்குள் ஓரளவிற்கு மயக்கத்தில் இருந்து வெளிவந்து இருந்தாள் சஹானா. சஹானாவிற்கு இப்பொழுது சந்தேகம் வரத் தொடங்கியது.அபிமன்யுவை இவன் தானே குத்தி விட்டதாக போன் வந்தது.இவன் இங்கே இத்தனை தைரியமாக நிற்கிறான் என்றால், அந்த போன் விஷயம் இவனின் ஏற்பாடாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது.அப்படியானால் அவருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை.அவர் நிச்சயம் வந்து என்னை காப்பாற்றி விடுவார்.அதுவரை கொஞ்சம் கவனமாக வார்த்தைகளை கையாள வேண்டும் என்ற எண்ணத்துடன் அவனிடம் பொறுமையாகவே பேச ஆரம்பித்தாள் சஹானா.

 

என்னை எதுக்காக இப்படி கடத்திக்கிட்டு வந்து இருக்க?

 

ஹா..ஹா... ஒரு பெண்ணை ஒருத்தன் எதுக்கு வேலை மெனக்கெட்டு கடத்திக்கிட்டு வருவானோ அதுக்கு தான்

 

சஹானாவின் இதயம் அவளது தொண்டையில் ஏறி துடிப்பது போல ஒரு பய உணர்வு அவளை ஆட்டுவித்தது.இருப்பினும் அவனிடம் பேசிக் கொண்டே அங்கிருந்து தப்புவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று கண்ணால் பார்த்துக் கொண்டே அவனிடம் பேச்சுக் கொடுத்தாள் சஹானா.

 

அது உன் கனவிலும் நடக்காது...அவர் உன்னை சும்மா விட மாட்டார்அவளின் குரலில் அத்தனை கர்வம் இருந்தது.அது அபிமன்யுவின் காதலை உணர்ந்து கொண்டதால் ஏற்பட்டு இருந்த உறுதி.தன்னை தேடி நிச்சயம் அபிமன்யு வருவான் என்று அவளுடைய காதல் கொண்ட மனம் நம்பியது.ஆம்! காதல் கொண்ட மனம் தான்.எப்பொழுது அபிமன்யுவின் உயிருக்கு ஆபத்து என்ற செய்தியை கேட்டாளோ அந்த நொடி அவள் சர்வ நிச்சயத்துடன் உணர்ந்து கொண்ட விஷயம் அது.

 

தன்னுடைய காதலை முதன்முதலில் தன்னவனிடம் நேரில் சொல்ல வேண்டும் என்று அவள் இப்பொழுது தவித்துக் கொண்டு இருந்தாள்.அதை சொல்லும் போது அபிமன்யுவின் கண்களில் தோன்றும் அந்த மின்னலை காண அவளது மனம் பரபரத்தது.அதற்கு முதலில் தான் இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் போதே அவன் மீண்டும் பேசத் தொடங்கினான்.

 

அவரா? எவர்? ஓ! உன்னுடைய ஆசை காதலன் அபிமன்யுவா?...அதற்கு வாய்ப்பு இல்லை..அவன் தான் கத்திக்குத்து பட்டு ஹாஸ்பிடலில் இருக்கிறானே...அவன் உயிர் பிழைப்பதே அபூர்வம்...இதில் எங்கே உன்னை காப்பாற்ற வரப் போகிறான் அவன் என்று எகத்தாளமாக சொல்லி அவளுடைய நெஞ்சில் தீயை வைத்தான் கிரி.

 

அவரை என்ன செய்தாய்?...சொல்லுடாசற்று நேரத்துக்கு முன் மனதில் தோன்றி இருந்த இதம் மறைந்து அபிமன்யுவிற்கு என்ன ஆனதோ என்ற பதட்டம் மீண்டும் தொற்றிக் கொள்ள கண்களில் நெருப்பு பறக்க அவனிடம் கேட்டாள் சஹானா.

 

ஐயோ பயமா இருக்கே... என்று நக்கலடித்தவன், என்ன சத்தம் எல்லாம் ஜாஸ்தியா இருக்கு...அடக்கி வாசி உன்னை காப்பாற்ற இப்போ இங்கே யாரும் வரப் போவது இல்லை.அதனால் வாயை மூடிக் கொண்டு இரு.கொஞ்ச நேரம் பேசாமல் இருந்து எனக்கு ஒத்துழைப்பு தந்தால் உனக்கு சொர்க்கத்தை காட்டுவேன்.என்று சொல்லியபடியே கோணலாக சிரித்துக் கொண்டே அருகில் நெருங்கினான்.

 

அவனுடைய வார்த்தைகளால் சஹானாவின் முதுகுத்தண்டு சில்லிட்டது. ‘இதற்காகத் தான் தாய்ப்பறவை குஞ்சை சிறகுக்குள் வைத்து பாதுகாப்பது போல என்னை பார்த்துக் கொண்டீர்களா’ என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டவள் அருவருப்பான சிரிப்புடன் தன்னை நெருங்கும் கிரியை கண்களாலேயே பொசுக்கியபடியே பேச ஆரம்பித்தாள்.

 

சொர்க்கத்தை காட்டுறியா?என் மேலே கையை வச்சு பாரு உனக்கு நான் நரகத்தை காட்டுறேன். உன் கையை உடைச்சுடுவேன் ராஸ்கல்...என்னை யாருன்னு நினைச்ச?”

 

ஏன் தெரியாமல்... நீ அவனோட அருமை காதலி இல்லை...அன்னைக்கு யாரோ ஒரு பொண்ணை தொட்டதுக்காக அத்தனை பேர் முன்னாடி என்னை அடிச்சானே...இப்ப என்ன செய்வான்?அவனோட அருமை காதலி இப்போ என்கிட்டே இருக்க...ஆனால் அவனால் ஒண்ணும் பண்ண முடியாது.ஊர்ல இருக்கிற பொண்ணுங்களை எல்லாம் பாய்ஞ்சு வந்து காப்பாத்துவானே...இப்போ அவனால் எழுந்து கூட உட்கார முடியாது.உன்னை எப்படி காப்பாத்த போறான்? அவனுக்கு நான் தர முதல் பதிலடி இது தான்.அடுத்து என்ன தெரியுமா? அவனோட அருமை தங்கச்சி

 

அவனது வார்த்தைகளை கேட்க கேட்க அபிமன்யுவிற்கு என்ன ஆயிற்றோ என்று ஒவ்வொரு நிமிடமும் துடித்துக் கொண்டு இருந்தவள் அவனது கடைசி வார்த்தையில் அதிர்ந்து போனாள்.

 

அடப்பாவி என்ன சொல்ற? அஞ்சலி எங்கே? அவளை என்ன செய்தாய்?

 

“ஹா ஹா...பாரேன்.என்ன அவளை காப்பாத்த துடிக்கிற போல...கவலைபடாதே இன்னும் அவளை கடத்தலை...முதலில் உன்னை முடிச்சுட்டு அடுத்து அவள் தான்.” என்று கூறி விட்டு விகாரமாய் சிரிக்கத் தொடங்கினான்.

 

தனக்காக இல்லாவிட்டாலும் அபிமன்யுவிற்காகவேனும்  அஞ்சலியை காப்பாற்ற வேண்டும்.அதற்கு முதலில்  இவனிடம் இருந்து தப்பியாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவள் முடிந்தவரை அவனிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இங்கிருந்து எப்படியாவது தப்பி விட வேண்டும்.’ என்ற முடிவோடு  கிரியுடன் பேச்சு வளர்த்தாள்.

 

உன்னை யார் அடுத்த வீட்டு பெண்களிடம் வாலாட்ட சொன்னது? நீ நல்லவனாக இருந்து இருந்தால் உன்னை அவர் அடித்து இருப்பாரா?

 

ஹா ஹா... கேட்டாயே ஒரு கேள்வி...என்னையும் என்ன அவனை போல சாமியார் ஆக சொல்கிறாயா?அவன் தான் கிறுக்கன்...சுற்றியும் அத்தனை பெண்களை வைத்துக் கொண்டு ராமன் போல வாழ நான் என்ன பைத்தியமா? நான் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தால் அவனுக்கு என்ன வந்தது? சம்பந்தப்பட்ட பெண்களே சும்மா இருக்கும் போது அவனுக்கு என்ன வந்தது? ஆத்திரம் அடங்காமல் கேட்டான் கிரி.

 

“அவரை நம்பி வரும் பெண்களுக்கு அவர் தானே பொறுப்பு.அவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவர் கடமை அதை தான் அவர் செய்தார். நீ செய்யும் பொறுக்கித்தனத்தை எப்படி பெண்கள் வெளியே சொல்வார்கள் என்ற திமிர் உனக்கு.அது தான் அவரே உன்னை தண்டித்தார்.” ஆக்ரோஷமாக பேசிக் கொண்டே கை கட்டை அவிழ்க்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள் சஹானா.

 

“ஆமா...அதுக்குதான்...அதுக்குதான்...ஊரில் உள்ள பெண்களை எல்லாம் என்னிடம் இருந்து காப்பாற்றினான் இல்லையா? இப்பொழுது அவனுடைய சொந்த குடும்பத்தை அவனால் காப்பாற்ற முடியவில்லை பார்.அதை நினைத்து நினைத்தே அவன் வாழ்நாள் முழுதும் அவன் சாகணும்.அது தான் எனக்கு வேணும். அது அவனுக்கான தண்டனை.அப்புறம் நீ...இதுக்கு அப்புறம் நீ உயிரோட இருந்தாலும் அவனை கட்டிக்க ஒத்துக்க மாட்ட...அவனோட வாழ்க்கையில் இருந்தே போய்ட்டா அப்புறம் மனிஷாவுக்கு ரூட் க்ளியர் ஆகிடும்.”

 

“இதை எல்லாம் பார்க்க நீ உயிரோட இருக்க மாட்ட...என் கிட்டே வந்தால் கூட உன்னை கொன்னுடுவேன்...ஜாக்கிரதை”

 

கை எல்லாம் கட்டிப் போட்டு இருக்கும் போதே இவ்வளவு திமிரா உனக்கு...என்னடி பேசிப் பேசியே நேரத்தை கடத்திட்டா எப்படியும் யாராவது வந்து காப்பாத்திடுவாங்கனு கணக்கு பண்ணுறியோ...அது தான் நடக்காது...இங்கே உன்னை காப்பாற்ற ஒரு பயல் வர மாட்டான். என்று சொல்லியபடியே அவளை நெருங்கத் தொடங்கினான்.

 

எவ்வளவோ முயற்சி செய்தும் இந்த கட்டை அவிழ்க்க முடியவில்லையே என்று எண்ணிக் கொண்டு இருந்தவள் விகாரமான சிரிப்புடன் அவளை நெருங்கும் கிரியை கண்டு  பயத்தில் உறைந்து போனாள்.

 

என்னடி இவ்வளவு நேரம் வாய் கிழிய பேசுன...இனி என்னை எதிர்த்து எப்படி பேசுறன்னு நானும் பார்க்கிறேன் என்று சொன்னபடியே மேலும் அவளை நெருங்கி வந்தான்.

 

உன்னை கடைசி முறையா எச்சரிக்கிறேன்.இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் உன்னை ...

 

என்னடி விட்டா ரொம்ப பேசுற...மேலே கை வச்சா என்ன செய்வ

 

ஆம்பிளையா இருந்தா உன் கையை அவள் மேல் வைத்து பார் கிரி என்ற குரல் அறையின் வாசலில் கேட்க ஒரே நேரத்தில் சஹானா ஆனந்தமும், கிரி அதிர்ச்சியும் அடைந்தனர்.

 

அறையின் வாசலை அடைத்தவாறு அபிமன்யுவும் , அஞ்சலியும் நின்று கொண்டு இருந்தனர்.அஞ்சலி  சஹானாவை கட்டி இருந்த கயிறை அவிழ்த்து அவளை விடுவித்ததும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போல ஓடிச்சென்று அபிமன்யுவின் மார்பில் அடைக்கலம் ஆகி விட்டாள் சஹானா.

 

அவள் அழுது முடிக்கும் வரை அவளை ஆதுரமாக அணைத்துக் கொண்டவன் அவளுடைய அழுகை ஓரளவிற்கு குறைந்ததும் அவளை விலக்கி நிறுத்தினான். கொஞ்சம் இருடா...ஒரு சின்ன வேலை இருக்கு.முடிச்சுட்டு வரேன்.என்று சொன்னவன் வெளியே ஓட முடியாமல் முழித்துக் கொண்டு நின்ற கிரியின் புறம் திரும்பினான்.

 

உன்னை ஏற்கனவே ஒருமுறை எச்சரித்தேன்.ஆனால் உனக்கு கொஞ்சமும் புத்தி வரவில்லையே...உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டு பெண்கள் மேலே கை வைக்க துணிவாய்...இதுக்கு மேலும் உன்னை விட்டு வைத்தால் நீ இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை நாசமாக்குவாயோ... என்று பேசியபடியே அவனை நெருங்கிய அபிமன்யு அவனை கிழிந்த நாறாக்கி விட்டுத் தான் ஓய்ந்தான்.

 

அபிமன்யு பரதம் ஆடி சஹானா பார்த்து இருக்கிறாள் ருத்ர தாண்டவம் ஆடி பார்த்ததில்லை.அபிமன்யு கிரியை அடித்து துவம்சம் செய்து கொண்டு இருந்தான். அபிமன்யுவை விட்டால் அவனை கொன்று விட்டுத் தான் ஓய்வான் என்று தோன்றவே சஹானா அவன் முன்னே வந்து அவனை தடுத்து நிறுத்த முயற்சித்தாள்.

 

என்னை தடுக்காதே சனா...என்னுடைய தொழில் எத்தனை புனிதமான தொழில் தெரியுமா? அதை என்னுடைய உயிரை விட மேலாக நான் நேசிக்கிறேன். அப்படிப்பட்ட என்னுடைய தொழிலில் இவனை போன்றவர்களும் இருந்து தொலைக்கிறார்கள்.இது எனக்கு மட்டும் அல்ல என்னுடைய தொழிலுக்கும் தான் அசிங்கம்.இவனை

இனி டான்ஸ் சொல்லித் தரேன்னு சொல்லி ஒரு பொண்ணு பக்கம் கூட போகக் கூடாது நீ... என்று ஆத்திரத்தோடு திரும்பியவன் ஏற்கனவே முகம் வாயெல்லாம் ரத்தமாக இருந்தவனை நோக்கி சென்று ஒரே உதையில் அவனுடைய காலை ஒடித்து விட்டுத் தான் திரும்பினான்.

 அதன்பிறகு அங்கு வந்த போலீசிடம் அவனை ஒப்படைத்துவிட்டு அவன் பேசிய அனைத்தையும் ரெக்கார்ட் செய்து வைத்து இருந்த ஆதாரத்தையும் கொடுத்து மனிஷாவையும் கைது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டு  அஞ்சலியையும்,சஹானாவையும் அழைத்துக் கொண்டு காரில் ஏறி வெளியேறினான் அபிமன்யு.

இவை அனைத்தும் நடந்து முடியும் வரை சஹானா அபிமன்யுவை தான் பார்வையால் தொடர்ந்து கொண்டு இருந்தாள்.அவனுக்கு உடலில் எங்கேனும் காயம் பட்டு இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு இருந்தாள்.அபிமன்யு இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டதால் ‘கத்தி குத்து நடந்ததாக சொன்னது அனைத்தும் நாடகம் போல.நான் தான் அவசரப்பட்டு கிளம்பி வந்து இப்படி மாட்டிக் கொண்டேனோ’என்று எல்லாம் சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.அவளுக்காக தான் தன்னுடைய வலியை வெளியே காண்பிக்காமல் அபிமன்யு நடமாடுகிறான் என்பது அப்பொழுது அவளுக்கு தெரிந்து இருக்கவில்லை.

தன்னுடைய சிந்தனைகளிலேயே உழன்றவள் அபிமன்யுவின் குரலில் நடப்பிற்கு வந்தாள்.

அவன் பேசியதை எல்லாம் கேட்டாய் இல்லையா அஞ்சலி...இது அனைத்திற்கும் அந்த மனிஷாவும் உடந்தை...உன்னை கடத்துவது உட்பட...இப்படிப்பட்ட ஒருத்தி தான் உனக்கு அண்ணியாக வர வேண்டும் என்று இன்னமும் நினைக்கிறாயா அஞ்சலி கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டே அவன் கேட்பது அங்கிருந்த இருவருக்கும் புரிந்தது.

சாரி அண்ணா...என்னை மன்னிச்சுடுங்க...

சரி சரி...இதை பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம்...வீட்டில் யாரும் எதையும் சொல்ல வேண்டாம்...இனி இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதே...புரிந்ததா?

அண்ணா...நான் மன்னிப்பு கேட்டது இப்பொழுது நடந்த விஷயத்திற்காக இல்லை...இனி நடக்கப் போகும் விஷயத்திற்காக பயத்தோடு திக்கி திணறி சொல்லி முடித்தாள் அஞ்சலி.

என்ன செய்து வைத்தாய் அஞ்சலி” கோபத்தில் கண்கள் சிவக்க கேட்டான் அபிமன்யு.

 


Post a Comment

புதியது பழையவை